Asianet News TamilAsianet News Tamil

சாதாரண போலீஸ்காரராக இருந்தவருக்கு இத்தனை கல்லூரிகளா..? இத்தனை ஆயிரம் கோடி சொத்துக்களா..?

சாதாரண போலீஸ்காரராக இருந்த ஜேப்பியார் இத்தனை கல்லூரிகளுக்கு அதிபரானது எப்படி? இத்தனை சொத்துக்கள் வந்தது எப்படி?

So many colleges for an ordinary policeman ..? So many billion assets ..? Jeppiar story
Author
Tamil Nadu, First Published Sep 18, 2021, 6:21 PM IST

ஜேப்பியார் கல்வி குழுமத்தினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலம் 91.04 ஏக்கர் நிலம் செம்மஞ்சேரியில் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 2010 கோடி ரூபாய். இந்த நிலையி சாதாரண போலீஸ்காரராக இருந்த ஜேப்பியார் இத்தனை கல்லூரிகளுக்கு அதிபரானது எப்படி? இத்தனை சொத்துக்கள் வந்தது எப்படி?So many colleges for an ordinary policeman ..? So many billion assets ..? Jeppiar story

ஜேப்பியாரின் சொந்த ஊர் குமரி மாவட்டத்தில் உள்ள முட்டம். ஜே.பங்குராஜ் என்ற பெயர்தான் பின்னாளில் ஜேப்பியார் ஆனது. காவல்துறையில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றிய அவர், எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசி. அதிமுக தொடங்கப்பட்ட நேரத்தில், கட்சி உறுப்பினர் படிவத்தில் எம்.ஜி.ஆர். கையெழுத்திட்டபோது, இவரும் கையெழுத்திட்டு உறுப்பினர் ஆனார். ஒரு பாதுகாவலராக இருந்து தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆருடன் சுற்றுப்பயணம் செய்தார். 1973-ல் இவரை தென் சென்னை அதிமுக மாவட்டச் செயலாளர் ஆக்கினார் எம்.ஜி.ஆர். அதிமுக ஆட்சி அமைந்ததும், குடிநீர் வாரிய தலைவர் ஆனார். எம்.எல்.சி யாகவும் மேலவை கொறடா ஆகவும் இருந்தார். 

எம்.ஜி.ஆர். இறந்ததும், ஜானகி அணியில் தன்னை இணைத்துக்கொண்ட அவர், “கவலையே படாதீங்க. விரட்டிடலாம்..”என்று ஜெயலலிதாவுக்கு எதிராக கடுமையாக நடந்துகொண்டார். எம்.ஜி.ஆர். இறந்தவுடன், அவரை அடக்கம் செய்வதற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, முதலில் மெரினா பீச் ஐ.ஜி. அலுவலகம் எதிரில், எந்த இடத்தில் எந்தமாதிரியான அமைப்பில் சமாதி அமைக்க வேண்டும் என்று நாவலர் நெடுஞ்செழியனும் உயர் அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினார்கள்.So many colleges for an ordinary policeman ..? So many billion assets ..? Jeppiar story

ஜேப்பியாரோ, அன்றைய உள்துறைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமனோடு சேர்ந்துகொண்டு, ‘அண்ணாவின் இதயக்கனி என்று பெயரெடுத்தவர் எம்.ஜி.ஆர். அதனால், அண்ணா சதுக்கத்துக்கு அருகில்தான் அவரைப் புதைக்க வேண்டும்.” என்று கடுமையாக வாதிட்டு, நாவலர் நெடுஞ்செழியனையும் சம்மதிக்க வைத்தார்கள்.

ஜேப்பியார் எப்போதுமே அதிரடி அரசியல்வாதிதான். அதனால் ‘மாவீரன்’என்ற அடைமொழி, அவருடைய பெயருக்கு முன்னாள் சேர்ந்துகொண்டது. திமுக ஆட்சியின்போது, வழக்கு பதிவாகி சிறையில் அடைபட்டிருக்கிறார். மேடையிலும்கூட அனல் பறக்கப்பேசுவார் ஜேப்பியார். அவருடைய பேச்சு எப்படி இருக்கும் என்பதற்கு  1982-ல் மதுரை பொதுக்கூட்டத்தில் பேசியதை உதாரணமாகச் சொல்லலாம்.

“டேய்.. எனக்கு பெரிய கொள்கை லட்சியம்னு எதுவும் இல்ல. நான் எம்.ஜி.ஆர். ரசிகன். எம்.ஜி.ஆர். என் தலைவன். இன்னைக்கு நான் இந்த வசதி அந்தஸ்தோட இருக்கேன்னா.. அதுக்கு என் தலைவன்தான் காரணம். சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளா இருந்த என்னை ஜேப்பியாரா இந்த அளவுக்கு உயர்த்தியது என் தலைவன்தான். என் தலைவனுக்காக உயிரையும் கொடுப்பேன். கொள்கையே தனக்கு இல்லை என்று  பேசிய ஜேப்பியார்தான், 1988-ல் எம்.ஜி.ஆரின் தாயார் சத்யபாமா பெயரில் இன்ஜினியரிங் காலேஜ் ஆரம்பித்து கல்வித்தந்தை ஆனார்.

 So many colleges for an ordinary policeman ..? So many billion assets ..? Jeppiar story

அது இப்போது பல்கலைக்கழகம் ஆகிவிட்டது. ஜோசப் பொறியியல் கல்லூரி, ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, பனிமலர் பொறியியல் கல்லூரி, சத்யபாமா மருத்துவக் கல்லூரி, செயின்ட் மேரீஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட், பனிமலர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட், எஸ்.ஆர்.ஆர்.பொறியியல் கல்லூரி, மாமல்லன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, பனிமலர் பாலிடெக்னிக் என பல கல்வி நிறுவனங்களை உருவாக்கிய அவர், ஜேப்பியார் குடிநீர், ஜேப்பியார் பால், ஜேப்பியார் இரும்பு, ஜேப்பியார் சிமெண்ட், ஜேப்பியார் உப்பு, தொழில்நுட்ப பூங்கா என பிற தொழில்களிலும் ஈடுபட்டார். அட, பத்திரிக்கைத் துறையையும் அவர் விட்டுவைக்கவில்லை. கடந்த 2016ம் ஆண்டு ஜேப்பியார் மரணமடைந்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios