தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான  கருணாநிதி கடந்த 27-ந் தேதியன்று ரத்த அழுத்தக் குறைவு காரணமாக  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அந்த நிலையில் இருந்து சீரான நிலைக்கு கொண்டு வரப்பட்டார். டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் குழுவின் மூலம் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அற்புதம் நிகழ்ந்த இரவு என்ற தலைப்பில் கவிதை எழுதியுள்ளார்.
 

அதில், கடல் பார்த்தவீட்டில் கடைசி நாள்
........
கடல் பார்த்த வீட்டில்
காலை வெளிச்சம் 
கடல் நீராய் பாயும் அறையில்
கண்கூச கண் விழிப்பது
இன்றுடன் கடைசி

கடல் பார்த்த வீட்டின் மாடத்திலிருந்து
கடல் பார்த்தபடி தேநீர் அருந்துவது
இன்றுடன் கடைசி

நேரத்துக்கு நேரம் நிறம் மாறும்
கடல் அலைகள் மேல்
எப்போதும் மிதந்து செல்லும்
ஒற்றைப்படகை
நாள் தவறாமல் காண்பது
இன்றுடன் கடைசி

கடலுக்கு மிக அருகில்
என் வீடு என யாருக்காவது
முகவரி சொல்வது
இன்றுடன் கடைசி

கடல் பார்த்தவீட்டிற்கு வந்தபிறகு
கடலில் ஒருமுறைகூட
கால் நனைக்கவில்லை
என தினமும் நினைப்பது
இன்றுடன் கடைசி

கடலின் உப்புக்காற்றில்
கருத்துவிட்டேன் என்று
செல்லமாய் கடல்பார்த்த வீட்டை
கோபித்துக்கொண்டது
இன்றுடன் கடைசி

கடலில் ஆழிப்பேரலை எழுவதை
அது கடல் பார்த்த வீடு நோக்கி வருவதை
காண்பேன் என கற்பனை செய்வது
இன்றுடன் கடைசி

கடல் பார்த்த வீட்டில்
கடலளவு இன்பங்கள் சில நாட்கள் இருந்தன
கடலளவு கண்ணீர் சில நாட்கள் இருந்தன
விரும்பத்தகாத என் மருத்துவ அறிக்கை ஒன்றை
நான் படித்த இரவில்
இருளில் கடல் அமைதியாக நின்றுகொண்டிருப்பதை
நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்

கடல் பார்த்த வீட்டிலிருந்து
எல்லாப் பொருள்களையும்
எடுத்துவைத்துவிட்டேன்
இன்னும் ஒரே ஒரு அட்டைப்பெட்டி இருந்தால்
இந்த நினைவுகளையும் போட்டு
ஒரு டேப் ஒட்டி விடுவேன்

ஒவ்வொருமுறை வீடு மாறும்போதும்
நானும் கொஞ்சம் மாறிவிடுகிறேன்
ஒரு வீட்டை விட்டுச் செல்லும்போது
என் மாம்சத்தின் சிறுபகுதியை அங்கு
வலியுணர விட்டுச் செல்கிறேன்

ஒரு நாடோடியாக
திரும்பிப் பாராது செல்லவே விரும்புகிறேன்
நான் ஒரு நாடோடி இல்லை என்பது
எனக்கு அவ்வளவு வருத்தமாக இருக்கிறது என தனது கிறுக்கலை கலைஞருக்கு சமர்பித்திருக்கிறார்.