S.M. Krishna son-in-law is in the IT raid
கஃபே காபி டே-யின் உரிமையாளரும், எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த்துக்கு சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த். இவர், கஃபே காபி டே நிறுவனத்தின உரிமையாளர் ஆவார்.
சித்தார்த்துக்கு, பெங்களூரு, மும்பை, சென்னை, சிக்மங்களூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கஃபே காபி டே நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிலையில், சித்தார்த்துக்கு சொந்தமான கஃபே காபி டே நிறுவனத்தில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, பெங்களூரு, சிக்மங்களூர், மும்பை உள்ளிட்ட 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சித்தார்த் மீதான வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக, இந்த சோதனை நடத்தப்பட்டுவதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கர்நாடக மாநில மின்துறை அமைச்சர் சிவக்குமாரின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், கஃபே காபி டே-யின் உரிமையாளரும், எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த்துக்கு சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
