நான் பேசிய வார்த்தைகளில் அடியும் இல்லை… நுனியும் இல்ல.. இப்படி செய்யலாமா என பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் கருணாஸ் கேள்வி எழுப்பினார். நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் கடந்த 16ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவரை கண்டு பயப்படுவதாக கூறினார். 

மேலும், காவல்துறை அதிகாரி ஒருவரை, முடிந்தால் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதிப்பார்க்கும்படி சவால் விடுத்தார். ஜாதி ரீதியான பல்வேறு சர்ச்சை கருத்துக்களை அவர் பேசிய பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைததொடர்ந்து இன்று காலை நடிகர் கருணாஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது.

நான் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நான் பேசியது உண்மைதான். ஆனால், அதை திரித்து விட்டதை யாராவது சொல்வீர்களா. ஆரம்பத்தில் நான் என்ன பேசினேன். கடைசியில் என்ன பேசினேன் என்றே தெரியவில்லை. நான் பேசியது ’ஞாயிற்றுக்கிழமை. ஆனால், அந்த வீடியோ வெளியானது புதன்கிழமை. எப்படி இதெல்லாம் செய்ய முடிகிறது. 

நான் பேசிய வீடியோவை, துண்டு துண்டாக வெட்டி இணைத்து, 2 நாள் கழித்து அதை வெளியிட்டு இருக்கிறார்கள். இப்போது போலீஸ் என்னை தேடுவதாக கூறியவுடன், என்னை தேடி இத்தனை பத்திரிகையாளர்கள் வந்துவிட்டீர்கள். ஆனால், நான் ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது, எத்தனை பேர் வந்தீர்கள். அப்படி வந்து இருந்தால், நான் பேசியது உங்களுக்கு தெரிந்து இருக்கும். அங்கு வராததால் இப்படி கேள்வி கேட்கிறீர்கள். நான் பேசியதில் அடியும் இல்ல… நுனியும் இல்ல… ஆனால், நான் பேசியதாக மட்டும் வீடியோ பரவி வருகிறது. 

நான் ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு என் தொண்டர்கள் இருக்கிறார்கள். என் சமுதாய மக்கள் இருக்கிறார்கள். நீங்களும் இருக்கிறீர்கள். நான் ஏன் பயப்பட வேண்டும். ஓடி ஒளிய வேண்டும் என காட்டமாக கூறினார்.