மும்பையில் நடந்த சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் தலைவராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார். 

பின்னர், கூட்டணி கட்சியினர் இணைந்து கவர்னரை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினர். இதனை ஏற்று கொண்ட கவர்னர், ஆட்சி அமைக்க வரும்படி அழைப்பு விடுத்தார். இதன்படி, உத்தவ் தாக்கரே, நாளை மகாராஷ்ட்ரா முதலமைச்சராக  பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா எம்பி., சஞ்சய் ராவத் , தேசத்தின் அரசியலில் மாற்றம் ஏற்படத் தொடங்கி இருக்கிறது. மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சியைப் பிடித்து.

முதலமைச்சராக  உத்தவ் தாக்கரே பொறுப்பேற்க  உள்ளார். எதிர்காலத்தில் சிவசேனா கூட்டணி மத்தியில் ஆட்சியைப் பிடித்தாலும் ஆச்சரியப்படாதீர்கள். 
மாற்றம் மகாராஷ்டிராவில் இருந்து தொடங்கி இருக்கிறது. மகாராஷ்டிராவைப் போல் மத்தியிலும் ஆட்சி அமைக்க கூடாதா?.  என்று சஞ்சய் ராவத்  கேள்வி எழுப்பினார்..