Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் மோடிக்குத் தெரியாமல்தான் எங்ககிட்ட பேசுனிங்களா: அமித் ஷாவை கேள்வியால் துளைத்த சிவசேனா...

பிரதமர் மோடிக்கு எந்தவிஷயமும் தெரியாமல்தான் அமித் ஷா எங்களிடம் கூட்டணி குறித்துப் பேசினாரா என்று பாஜக தேசியத்தலைவருக்கு சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. 

sivasena asked questioned to BJP
Author
Mumbai, First Published Nov 15, 2019, 7:59 AM IST

மகாராஷ்டிராவில் நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷியாரி அழைத்தும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. 

இதனால், குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.சிகிச்சை முடிந்து இன்று தனது இல்லத்துக்குச் செல்லும் முன் நிருபர்களுக்கு சஞ்சய் ராவத் பேட்டி அளித்தார்.பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா சிவசேனாவை விமர்சித்திருப்பது  குறித்து கேள்வி எழுப்பினர். 

sivasena asked questioned to BJP

அதற்கு ராவத் அளித்த பதிலில் கூறியதாவது:பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கும் எங்கள் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கும் இடையே நடந்த உடன்பாடு தனிப்பட்ட முறையில் நடந்தது. தேவேந்திர பட்னாவிஸ்தான் அடுத்த முதல்வர் என்று பிரதமர் பலமுறை பொது மேடையில் பேசியதை நாங்கள் கேட்டு இருக்கிறோம்.

sivasena asked questioned to BJP

அதுபோல சிவசேனாவும் இதேபோன்ற கருத்தைக் கூறியதும் நினைவிருக்கட்டும். நான் கேட்கிறேன். உத்தவ் தாக்கரேவுடன் சேர்ந்து செய்து கொண்ட உடன்பாடான ஆட்சி அதிகாரத்தில் சம பங்கு அளிப்பது குறித்து, பிரதமர் மோடிக்கு அமித் ஷா தகவல் தெரிவித்தாரா? அவ்வாறு தெரிவித்திருந்தால், இந்த அளவுக்கு மாநிலத்தில் சூழல் மோசமடைந்திருக்காது.

sivasena asked questioned to BJP
பாஜக-சிவசேனா இடையே தொகுதிப் பங்கீடு குறித்து பாஜக மூத்த தலைவர்கள் பேச்சு நடத்தியபோது, பிரதமர் மோடியை ஒதுக்கிவைத்துதான் முடிவு எடுத்தார்களா என்பது வியப்பாக இருக்கிறது. தேர்தல் முடிவு வெளிவரும் வரை ஏன் அமித் ஷா மவுனமாக இருந்தார்.

நாங்கள் அரசியலில் ஒருபோதும் வியாபாரம் செய்தது இல்லை. அரசியலில் லாபம், நஷ்டம் என்ற அடிப்படையில் பார்த்தது இல்லை. சுயமரியாதை என்ற ஒருவிஷயத்துக்காக அனைத்தையும் வெளிப்படையாக வைக்கிறோம் “எனத்தெரிவித்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios