உடல்நலம் குன்றி இருக்கும் காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இறக்கும்  திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து நடிகர்  சிவகார்த்திகேயன் நேரில் வந்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் நலம் விசாரித்தார்.

சென்னை காவேரி மருத்துவமனையில் ‌திமுக தலைவர் கருணாநிதி  6 வது‌ நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ‌28ஆம் தேதி ம‌ருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கருணாநிதிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து வருகின்றனர்.

நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா மற்றும் கவுண்டமணி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பெரும் திரளாக காவேரி மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், இன்று மாலை கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக காவேரி மருத்துவமனைக்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன் சென்றார். அப்போது கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார்.

 சிவகர்த்திகேயனைத் தொடர்ந்து காமெடி நடிகர்கள் போண்டா மணி, முத்துக்காளை, கிங்காங் ஆகியோர் வந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், கருணாநிதி அவர்கள் விரைவில் உடல் நலம் பெற வேண்டும்...அவரது பராசக்தி வசனத்தை பேசி தான் நடிக்க வந்தோம்..அவர் உடல் நலம் பெற்று அடுக்கு மொழியில் தமிழ் பேச வேண்டும் என தெரிவித்தனர்.