நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த திட்டம்..! ஸ்டாலினுடன் முக்கிய ஆலோசனை நடத்திய சிபிஎம் தலைவர்கள்
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்கட்சிகளை ஒன்றினைக்கும் வகையில் விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே பல முறை ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.ஆனால் யார் பிரதமர் வேட்பாளர் என்ற நிலைப்பாட்டால் கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லாத நிலை நீடித்து வருகிறது. தற்போது கர்நாடகவில் பாஜகவை காங்கிரஸ் கட்சி வீழ்த்தியது மூலம் மீண்டும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி தலைவர்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அடுத்த கட்ட திட்டம் தொடர்பாக விரைவில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இந்தநிலையில் சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சந்தித்துப் பேசினார். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அமைச்சர் துரைமுருகன் உடன் இருந்தனர்.
கள்ளச்சாராய விற்பனை செய்தவருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கிய திமுக அரசு... அண்ணாமலை விமர்சனம்!!
விரைவில் எதிர்கட்சி கூட்டம்
அப்போது நாடாளுமன்ற தேர்தல் திட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் மிகப்பெரிய அளவிலான கூட்டணி அமைக்க வேண்டும் எனவும் அதற்காக பல்வேறு மாநிலங்களில் உள்ள எதிர்கட்சிகளை சந்தித்து பேச வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, கர்நாடக தேர்தலுக்குப் பிந்தைய நிலவரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விவாதித்தேன். இந்திய அரசமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க, பாஜகவை வீழ்த்த வேண்டும். இதற்காக அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயல்படுவோம். இந்திய அளவில் எதிர்க் கட்சிகளை திரட்டி ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடத்தப்பட இருப்பதாக தெரிவித்தார்.
கல்வி கொள்கையில் இந்துத்துவா கருத்து
இந்த சந்திப்பின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு கல்விக் கொள்கை வகுக்கும் வல்லுநர் குழுவில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை சீரமைக்க கோரி முதல்வரிடம் கடிதம் வழங்கினார்.மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் நாடு முழுவதும் கல்வியில் சனாதன இந்துத்துவ கோட்பாட்டை புகுத்ததீவிரமாக முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழக அரசு ஏற்படுத்திய கல்விக்கொள்கை குழுவில் தற்போது ஏற்பட்டுள்ள சர்ச்சை கவலை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கல்வி கொள்கை குழுவை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
ஸ்டாலினை பதவி விலக சொல்லும் அருகதை இபிஎஸ்-க்கு இல்லை.. இறங்கி அடிக்கும் டிடிவி.தினகரன்..!