ஸ்டாலினை பதவி விலக சொல்லும் அருகதை இபிஎஸ்-க்கு இல்லை.. இறங்கி அடிக்கும் டிடிவி.தினகரன்..!
ஒரு டிடிவி ஒரு ஓ.பி.எஸ் இணைந்ததற்கே எடப்பாடி பழனிச்சாமி அவ்வளவு பதறுகிறார். நானும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும் நீண்டகால நண்பர்கள். இடையில் ஏதோ விதியின் சதியால் சிலரின் தவறான தூண்டுதலால் பிரிந்திருந்தோம்.
நானும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும் நீண்டகால நண்பர்கள். இடையில் ஏதோ விதியின் சதியால் சிலரின் தவறான தூண்டுதலால் பிரிந்திருந்தோம் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பதவி விலக சொல்ல இபிஎஸ்-க்கு எந்த அருகதையும் இல்லை. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் குருவியைப் போல13 பேரை சுட்டுக் கொல்லப்பட்ட போது அதற்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலகி இருந்திருந்தால் இன்று கள்ளச்சாராயம் விவகாரத்தில் ஸ்டாலினை பதவி விலக சொல்லும் அருகதை இருந்திருக்கும்.
காவல் துறையின் மெத்தன போக்கால் கள்ளச்சாராயத்தால் இத்தனை உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி தமிழ்நாட்டில் நடக்காமல் தடுக்க வேண்டும். போதை கலாசாரத்தால் மாணவர்கள் சீரழிவதை தடுக்க வேண்டும் என்றார்.
மேலும், ஒரு டிடிவி ஒரு ஓ.பி.எஸ் இணைந்ததற்கே எடப்பாடி பழனிச்சாமி அவ்வளவு பதறுகிறார். நானும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும் நீண்டகால நண்பர்கள். இடையில் ஏதோ விதியின் சதியால் சிலரின் தவறான தூண்டுதலால் பிரிந்திருந்தோம். இன்று மீண்டும் இணைந்து விட்டோம்.
சுய நலத்துக்காக, சுய லாபத்துக்காக நாங்கள் இணையவில்லை. அம்மாவின் இயக்கத்தை மீட்டு எடுப்பது தான் எங்கள் நிலைப்பாடு. பணமூட்டைகளோடு திரிபவர்களை வீழ்த்தி ஜெயலலிதாவின் இயக்கத்தை அவரது தொண்டர்கள் கைகளில் ஒப்படைப்போம். ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் இல்லை என எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.