காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மஞ்சுளா என்ற பெண் கண்ணில் கருப்பு துணி கட்டி கையில் பதாகை ஏந்தியவாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 

என்னை சீரழித்த  காவல் துறை மீது நடவடிக்கை எடுங்க என்ற  வாக்கியம் அமைந்தவாறு, மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு தனி ஒரு நபராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.

இதனை தொடந்து, காவல்துறையினருக்கு எதிராக பதாதைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை குண்டு கட்டாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருக்கழுகுன்றம் போலீசார் மஞ்சுளா மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்ததாக குற்றச்சசாட்டை வைத்து உள்ளார் மஞ்சுளா. முழுமையான விசாரணைக்கு பிறகே நடந்தது என்ன என்பது வெளிச்சத்திற்கு வரும்.