லுலு-வை எதிர்க்கும் விக்ரமராஜாவே! உங்கள் மகன் ஏம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு எதிர்க்கலாமே?அதிமுக விளாசல்

தமிழகத்தில் 3500 கோடியில் லூலூ ஹைபர் மால்களை அமைக்க மு.க.ஸ்டாலின் ஒப்பந்தம் போட்டார்.  அண்மையில் திமுக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தான் கோவையில் திறந்து வைத்தார்.

Singai Ramachandran slams vikramaraja

சிறுவணிகர்களை பாதிக்கும் கார்ப்பொரேட் நிறுவனத்துக்கு ஆதரவாக திமுக செயல்படுவதை கண்டிப்பது உண்மையென்றால் வணிகர் சங்கத் தலைவரின் மகன், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா பதவியை ராஜினாமா செய்து எதிர்க்கலாமே? என சிங்கை ராமசந்திரன் கூறியுள்ளார்.

திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தொழில்துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது  துபாய்யை சேர்ந்த லுலு குழுமம் ரூ.3,500 கோடியை தமிழகத்தில் முதலீடு செய்ய தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்தது. அதன்படி கோவையில் லுலு மார்க்கெட்டை தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்தார். இதனையடுத்து, சென்னையில் தனது கிளையை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். 

இதையும் படிங்க;- உதயநிதி ஸ்டாலினை சாபக்கேடு என்று சொல்கிறா திருமா? எங்கிருந்து வந்தது தைரியம்! நாராயணன் திருப்பதி.!

Singai Ramachandran slams vikramaraja

மத்திய, மாநில அரசுகள் வணிகர்களை பாதிக்கும் வகையில் மிக பெரிய லூலூ மால் போன்ற மால்களை திறக்க அனுமதிக்க கூடாது,  கார்பரேட் நிறுவனங்கள் நேரடியாக நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக முதல்வரை சந்திக்க உள்ளதாக விக்கிரமராஜா கூறியிருந்தார். 

இதையும் படிங்க;-  இபிஎஸ் கோட்டையில் கெத்து காட்ட திட்டமிடும் ஓபிஎஸ்.!டிடிவியோடு இணைந்து அடுத்த கட்ட திட்டத்திற்கு தயாரான பிளான்?

Singai Ramachandran slams vikramaraja

இந்நிலையில், வணிகர் சங்கத் தலைவரின் மகன், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா பதவியை ராஜினாமா செய்து எதிர்க்கலாமே?  என சிங்கை ராமசந்திரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அதிமுக கோவை மண்டல ஐடி விங் செயலாளர் சிங்கை ராமசந்திரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழகத்தில் 3500 கோடியில் லூலூ ஹைபர் மால்களை அமைக்க மு.க.ஸ்டாலின் ஒப்பந்தம் போட்டார்.  அண்மையில் திமுக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தான் கோவையில் திறந்து வைத்தார்.

 

சிறுவணிகர்களை பாதிக்கும் கார்ப்பொரேட் நிறுவனத்துக்கு ஆதரவாக திமுக செயல்படுவதை கண்டிப்பது உண்மையென்றால் வணிகர் சங்கத் தலைவரின் மகன், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா பதவியை ராஜினாமா செய்து எதிர்க்கலாமே?  என கேள்வி எழுப்பியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios