காவிரி பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சந்திக்க நடிகர் சிம்பு நேரம் கேட்டுள்ளதாகவும், சிம்புவுக்கு கர்நாடகாவில் தற்போது ஆரதவாளர்கள் பெருகியுள்ளதால் அவர்களுடைய வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்ய சித்தராமையா நினைப்பதாகவும் சிம்பு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ் திரைப்படவுலகினர் பங்கேற்ற அறப்போராட்டம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. கமல், ரஜினி உட்பட ஏராளமானோர் இந்த போராட்டத்தில்  கலந்து கொண்டனர். ஆனால் இதில் பங்கேற்காத நடிகர் சிம்பு தனியாக செய்தியாள்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அந்த பிரஸ் மீட்டில் சிம்பு கூறிய ஒரே வார்த்தையால் கர்நாடகத்திற்கு செல்லும் தமிழக பேருந்துகளை தேடிப்பிடித்து கன்னட மக்கள் தண்ணீர் கொடுப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து  இருமாநில அரசியல்வாதிகளே செய்ய முடியாததை சிம்பு தனியொருவராக சாதித்துவிட்டதாக அவரது  ரசிகர்கள் பெருமைப்பட்டு கொண்டனர்.

இந்த நிலையில் காவிரி பிரச்சனை குறித்து பேச, நடிகர் சிம்பு. சர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் நேரம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் தமிழக முதலமைச்சருக்கே நேரம் கொடுக்காத சித்தராமைய்யா, சிம்புவுக்கு கொடுப்பாரா? என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் சிம்புவுக்கு ஆதரவாக கன்னட மக்கள் பலர் டுவிட்டரில் கருத்து தெரிவித்திருத்து வருவதால் இந்த நேரம் சிம்புவை சந்திப்பதால் அவர்களுடைய வாக்குகளை அப்படியே அறுவடை செய்யலாம் என சித்தராமையா நினைப்பதாகவும் கூறப்படுகிறது. இது நடக்குமா என்று யாராலும் உறுதியிட்டு கூறமுடியுமாத நிலைதான் உள்ளது.

அதே நேரத்தில் ஒரு சில ஊடகங்கள் சிம்புவின் பேச்சை பெரிதுபடுத்தி விட்டதாகவும், அதுவே சமூக வலை தளங்களில் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. கன்னட மக்கள் டம்பளரிலோ அல்லது ஒரு பாட்டிலிலோ வேண்டுமானால் தண்ணீர் தருவார்கள், ஆனால் காவிரி நீரை தர மாட்டார்கள்  என  அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

50 ஆண்டுகளாக தீராத காவிரி நதிநீர் பிரச்சனை சிம்பு ஒருவாரால் தீர்க்க முடியாது என்றும்,அவர் சிறு பிள்ளைத் தனமாக பேசி வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

காவிரி தண்ணீருக்காக சிம்பு ஏதாவது கடுகளவு செய்தால் கூட அது மிகப்பெரிய சாதனைதான் என்று கூறுகின்றனர் அரது ரசிகர்கள்.