மூட நம்பிக்கைகளுக்கும், தீண்டாமைக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும், பெண்ணடிமைத்தனத்திற்கும் எதிராக வலிமையாகப் போர் புரிந்த தந்தை பெரியாரின் நினைவு நாள் வரவிருக்கும் நிலையில், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக உருவாகியிருக்கும் ‘பெரியார் குத்து’ பாடல்  நேற்று வெளியானது.

பெரியார் குத்து என்கிற பெயரில் சிம்பு ஒரு பாடல் பாடி இருக்கிறார். ரிபெல் ஆடியோ என்ற நிறுவனத்திற்காக மதன் கார்க்கி எழுதிய பாட்டுக்கு சிம்பு பாடி டான்ஸ் ஆடியுள்ளார். இந்த பாடல் வீடியோ நேற்று   வெளியாகி வலைதளத்தில் செம்ம வைரல்.

பெரியார் குத்து பாடலில் 

நான் ஒரு வார்த்தை சொன்னா உன் மதமே காலி, உன் மதத்தை மூட்டை கட்டி தூக்கி எறி, 

வெட்கத்தை மானத்தை ரோஷத்தை கூட நீ ஆதாரில் இணைக்கணும் என செம்ம குத்து குத்தியிருக்கிறார்.

ஓட்டுக்கு தலைவனும், நோட்டுக்கு தொண்டனும் கையேந்தி தான் நிற்கணும், ஆட்சியை புடிச்சிட தாவியும், கூவியும், பல்ட்டி தான் அடிக்கணும், கிழவன் சிலையை உடைக்கும் கழுதை என்ன செஞ்சு கிழிக்கும்  என கும்மாங்குத்தும் மிஸ் ஆகவில்லை.

உண்மையான நாய் அது நன்றியோட கெடக்கும்,  அட வேஷம் போட்டு வந்த நாய் மானங்கெட்டு கொரைக்கும்  என ஊமக்குத்தும் இருக்கு...

பெரியார் குத்து என்ற பெயரில் சிம்பு தன் பாட்டுக்கு பாடிவிட்டு போக பெரியார் சிலை விவகாரத்தில் அவர் யாரை குத்துகிறார் என்று தெரிந்த மீடியா மற்றும் நெட்டிசனின் கேள்விக்கு பதிலளித்த ஹெச்.ராஜா சிம்புவின் ‘பெரியார் குத்து’ பாடலை கேட்க எனக்கு நேரமில்லை என சொல்ல அதற்கும் விடாமல், உங்களுக்கு நேரமில்லாவிட்டாலும் பரவாயில்லை. உங்க அட்மினையாவது நேரம் ஒதுக்கி கேட்டுப்பார்க்க சொல்லுங்க என மரண குத்து குத்தியுள்ளார்.

பெரியார் குத்து பாடலை பத்தி சுருக்கமா சொல்லனும்னா...

பெரியார், அந்த காலத்து சிம்பு! சிம்பு இந்த காலத்து பெரியார்...

இன்னும் இத விட சுருக்கமா சொல்லனும்னா... இரண்டு பேருமே சிம்பு தான்! என சிம்புவை உசுப்பேத்திய நெட்டிசன்ஸ் ஹெச்.ராஜாவிடம் கோத்து விட்டுள்ளனர்.