மைசூரில் நடந்த கட்சிக் கூட்டம் ஒன்றில் கோபமாக பேசிய பெண் ஒருவரிடம் இருந்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மைக்கை பிடுங்கிய போது அநத்ப் பெண்ணின் துப்பாடாவும் சேர்ந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது அநாகரிகமான செயல் என பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சென்ற ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்லில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றினாலும், அந்த கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதையடுத்து 37 சட்டப் பேரவை உறுப்பபினர்களைப் பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பில் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி உருவானது. குமாராசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா பொறுப்பு எதுவும் ஏற்றுக் கொள்ளவிலலை. இந்நிலையில் கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சித்தராமையா கலந்து கொண்டார். அப்போது பெண் ஒருவர் சித்தராமையாவிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் அவர் ஆவேசமடைந்தார்.
வாயை மூடிக்கொண்டு கீழே உட்கார் என்று சித்தராமையா கோபத்தில் கத்திய போதும், அந்த பெண் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். இதனால் பொறுமை இழந்த சித்தராமையா, அந்த பெண் கையில் வைத்திருந்த மைக்கை வேகமாக பறித்தார். அப்போது, அந்த பெண்ணின் துப்பட்டாவும் சித்தராமையாவின் கையோடு வந்து விட்டது.
இதற்குப் பிறகும் அவர் பேசிக் கொண்டே இருந்ததால் அந்தபெண்ணின் தோளைப் பிடித்து அழுத்தி உட்கார வைத்தார். இந்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ வெளியாகி சித்தராமையாவுக்கு எதிராக அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பெண்ணிடம் அநாகரிமாக சித்தராமையா நடந்து கொண்டிருப்பதாக பாஜக தலைவர் ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 28, 2019, 7:55 PM IST