திப்பு சுல்தானை கொன்றது போல் சித்தராமையாவையும் கொல்ல வேண்டும்.. கர்நாடக அரசியலில் புது சர்ச்சை
திப்பு சுல்தானை கொன்றது போல் சித்தராமையாவையும் கொல்ல வேண்டும் என்று அமைச்சர் கூறிய கருத்து அரசியலில் பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.
ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) மற்றும் ஆம்ஆத்மி இடையே கடும் போட்டி நிலவலாம் என கூறப்படுகிறது. தற்போது இந்த 4 கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியை மேற்கொண்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் முதல்வர் பதவியை பெற தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டிகேசிவக்குமார் ஆகியோர் ஆர்வமாக உள்ளனர்.
இந்த நிலையில், மாண்டியாவில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் அஸ்வத் நாராயணா சர்ச்சை கருத்தை பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அமைச்சர் அஸ்வத் நாராயணா பேசியபோது, திப்பு சுல்தானை கொன்றது போல் சித்தராமையாவையும் கொல்ல வேண்டும் என்பதே சர்ச்சைக்கு காரணம். அமைச்சரின் இந்தப் பேச்சிற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து வருகிறார்கள். அமைச்சரின் கருத்துக்கான பொருளை சிலர் தவறாகப் புரிந்து கொள்வதாக பாஜகவினர் விளக்கம் அளித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க..Karnataka : யாத்திரையை கையில் எடுத்த பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம்..! கர்நாடகா தேர்தல் ரேஸில் முந்துவது யார்.?
இதுகுறித்து பேசிய சித்தராமையா, திப்பு சுல்தானை போல் சித்தராமையா கொல்ல வேண்டும் என்று அமைச்சர் பேசிய குறித்த கேள்விக்கு, இப்படிப்பட்ட பாஜக கட்சிக்கு நீங்கள் ஓட்டு போட வேண்டுமா ?. மக்களின் ஆதரவு உள்ள வரை என்னை யாராலும் ஒழிக்க முடியாது. அஸ்வத் நாராயண் பகல் கனவு காண்பதை நிறுத்த வேண்டும்.
நான் முதல்வராக இருந்தபோது விவசாய கடன்களை தள்ளுபடி செய்தேன். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்குவதாக நாங்கள் ஏற்கனவே அறிவித்துள்ளோம். இந்த வாக்குறுதிகளை நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று கூறினார்.
இதையும் படிங்க..Erode East Election : பரோட்டா போடுவதும், வடை சுடுவதும்தான் அமைச்சர்களின் வேலையா.? எடப்பாடி பழனிசாமி அதிரடி !