Asianet News TamilAsianet News Tamil

மிஸ்டர் மோடி...இப்பவாவது மன்மோகன்சிங் சொல்வதை கேளுங்கள்...!! சிவசேனா கட்சி அதிரடி அட்வைஸ்...!!

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா கட்டுரை வரைந்துள்ளது. பொருளாதார மந்த நிலைவிவகார்த்தில் அரசியல் செய்யக்கூடாது எனவும், மன்மோகன் போன்ற பொருளாதார வல்லுனர்களின் அலோசனைகளை கேட்கும் இது என்றும். மந்த நிலையை போக்க மன்மோகன் கூறியதைப்போல நிபுணர்களின் ஆலோசனைகளை நாம் எடுத்துக்கொண்டு பிரச்சனையை தீர்க்க வேண்டும் எனவும் அதில் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

shiv sena leader uddhav thakre advice to central government
Author
Mumbai, First Published Sep 5, 2019, 11:42 AM IST

நாட்டின் பொருளாதார நிலையை போக்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள வேண்டும் என பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா வலியிறுத்தியுள்ளதுshiv sena leader uddhav thakre advice to central government

நாட்டின பொருளாதாரம் எப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை நாடு சந்திக்கும் ஆபாயத்தில்  உள்ளது.  இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பொருளாதார மந்தநிலை குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் இந்தியா அதிவேக பொருளாதார வளர்ச்சியை காண்பதற்கான வளத்தையும் ஆற்றலையும் பெற்ற நாடு, ஆனால் மோடி அரசின் தவறான நிர்வகம் மற்றும் அனுகுமுறைகள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் மிக வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. கடந்ந காலாண்டில் பொருளாதாரம் வெறும் 5 சதவீதம் மட்டுமே என்பது மிகவும் கவலை அளிக்கிறது. இந்தியா அதலபாதாளத்திற்கு சென்று கெண்டிருக்கிறது என்பதற்கான அடையாளம் தான் இந்த 5 சதவீத பொருளாதாரம். 

shiv sena leader uddhav thakre advice to central government

எனவே மனிதானால் உருவக்கப்பட்ட இந்த நெருக்கடியில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றால் , மத்திய பாஜக அரசு அரசியல் பழிவாங்கம் நடவடிக்கைகளை கைவிட்டு பொருளாதார சிந்தை மிக்க அளுமைகளின் ஆலோசனைகளை  நாடவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மன்மோகன்சிங்கின் கருத்தை பாஜக அரசு ஏற்க மறுத்துவிட்டது. இது குறித்து பேசிய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மன்மோகன் சிங்கின் கருத்தை நாங்கள் புறக்கணிக்கிறோம். உலகின் 11வது பெரிய பொருளாதார சக்தியாக இருந்த இந்தியா, தற்போது  ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது, மூன்றாவது இடத்திற்கு முன்னேற வேண்டும் என்பது எங்களின் இலக்கு என்று அவர் கூறினார். shiv sena leader uddhav thakre advice to central government

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்தை மத்திய அரசு ஏற்க வேண்டும் என சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா கட்டுரை வரைந்துள்ளது. பொருளாதார மந்த நிலைவிவகார்த்தில் அரசியல் செய்யக்கூடாது எனவும், மன்மோகன் போன்ற பொருளாதார வல்லுனர்களின் அலோசனைகளை கேட்கும் இது என்றும். மந்த நிலையை போக்க மன்மோகன் கூறியதைப்போல நிபுணர்களின் ஆலோசனைகளை நாம் எடுத்துக்கொண்டு பிரச்சனையை தீர்க்க வேண்டும் எனவும் அதில் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios