கருத்து சுதந்திரம் பற்றி பேசிய சிவசேனா, தற்போது டிவிட்டரில் கருத்து கூறியதற்காக பாஜகவின் சமூக ஊடகப் பிரிவைச் சேர்ந்த ஒருவரை கைது செய்ததை அடுத்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கருத்து சுதந்திரம் பற்றி பேசிய சிவசேனா, தற்போது டிவிட்டரில் கருத்து கூறியதற்காக பாஜகவின் சமூக ஊடகப் பிரிவைச் சேர்ந்த ஒருவரை கைது செய்ததை அடுத்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிராவில் பாஜகவும் சிவசேனாவும் நெருங்கிய கூட்டணி கட்சிகளாக திகழ்ந்து வந்தனர். இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தொகுதி பங்கீட்டில் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கூட்டணியை சிவசேனா முறித்துக்கொண்டது. இதை அடுத்து தனியாக போட்டியிட்டு ஆட்சி அமைக்க போவதாக சிவசேனா கட்சி தெரிவித்தது. அதன்படி தேர்தலில் வெற்றி பெற்று மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைத்தது. இதனால் பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையேயான பகை முற்றியது. இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அவ்வப்போது அறிக்கை போர்களும் நடைபெற்று வருகிறது. இதனிடையே மகாராஷ்டிரா முதல்வரின் மகனும் சினசேனாவின் இளைஞரணி தலைவருமான ஆதித்யா தாக்கரே, பாஜக கருத்து சுதந்திரத்தை அனுமதிப்பதில்லை. மோடியும் அமித்ஷாவும் கருத்து சுதந்திரத்தை பறிக்கிறார்கள் என்று விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் கருத்து சுதந்திரன் பற்றி பேசும் சிவசேனா, தற்போது ஒரு டிவீட் செய்ததற்காக ஒருவரை கைது செய்துள்ளது. லல்லு பிரசாத் யாதவ் சிறை தண்டணையால் பதவி இழந்த போது தனது மனைவியான ராப்ரி தேவியை முதலமைச்சராக அமர வைத்தார். அவரது பெயரை குறிப்பிட்டு மகாராஷ்டிராவின் ராப்ரி தேவி என உத்தவ் தாக்ரேவின் மனையை ஒப்பிட்டு போட்ட பதிவு சர்ச்சையானது. இதை அடுத்து இந்த பதிவை போட்ட பாஜகவின் சமூக ஊடகப் பிரிவைச் சேர்ந்த ஒருவரை, மும்பை காவல்துறை குற்றப்பிரிவின் சைபர் செல் பிரிவு கைது செய்தது. ஜிதென் கஜாரியா என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், ஜனவரி 4 அன்று, மராத்தி ராப்ரி தேவி என்ற தலைப்பில் ராஷ்மியின் புகைப்படத்தை வெளியிட்டார்.
தீவன ஊழலில் தனது கணவர் லாலு பிரசாத் ராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட போது, பீகாரில் ராப்ரி தேவி பதவியேற்றது போல, முதல்வர் பதவியை அவரது மனைவியே ஏற்பார் என்று முதல்வர் உடல்நிலைப் பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து கைது செய்யப்பட்ட நபரின் வழக்கறிஞரும் பாஜக செயலாளருமான விவேகானந்த் குப்தா கூறுகையில், சைபர் போலீசார் காரணம் அல்லது புகார்தாரர் யார் என்பதை குறிப்பிடாமல் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு கடிதம் கொடுத்துள்ளனர். அவர்களின் அறிவுறுத்தலின்படி தனது கட்சிக்காரர் அவர்கள் முன் ஆஜராகி உள்ளதாகவும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கருத்து சுதந்திரம் பற்றி பேசிய சிவசேனா, தற்போது டிவீட் செய்ததற்கு கைது செய்துள்ளதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
