sfi students protest against neet
நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது என்றும் அத்தகைய நீட் தேர்வை தடைசெய்ய வலுயுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் இந்திய மாணவர் சங்கம் சென்னை அண்ணா நகரில் முற்றுகை போராட்டம் நடத்தினர்
நீட் தேர்வை தடைசெய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் அண்ணாநகரில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த மாணவர்கள் வந்தனர். அவர்களுக்கு போராட அனுமதி மறுத்ததை ஒட்டி காவல்துறையினர் தடையை மீறி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

போராட்டக்காரர்களை வெளியேற்றும் விதமாக காவல் துறை செயல்பட்டதில் மாணவர்களுக்கும் காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒரு மாணவி மயக்கமிட்டு விழுந்தார். மாணவிகளை பெண் காவல்துறை அதிகாரி போட்டிருக்கும் துப்பட்டாவை பிடித்து இழுத்து கொண்டு செல்வதால் பரபரப்பு ஏற்பட்டது.
