மாந்திரீகம் வைத்துவிடுவோம் எனக் கூறி 16 வயது சிறுமியை மிரட்டி மூன்று மாதங்களாக 2 சாமியார் உல்லாசம் அனுபவித்து வந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மாந்திரீகம் வைத்துவிடுவோம் எனக் கூறி 16 வயது சிறுமியை மிரட்டி மூன்று மாதங்களாக 2 சாமியார் உல்லாசம் அனுபவித்து வந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் அந்த சிறுமி கர்பமாகியுள்ளார். இந்நிலையில் போலீசார் அவ்விரு சாமியார்களையும் கைது செய்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 6 வயது சிறுமி முதல் 60 வயது கிழவிகள் வரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகின்றனர். பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை கற்பழிக்கும் சம்பவங்கள் நாளுக்க நாள் அதிகரித்து வருகிறது. பெண்கள் கர்ப்பமான பிறகே அச்சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வருகிறது. சமூகத்தில் பெரிய மனிதர்கள் கூட இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை தடுக்க எவ்வளவோ சட்டதிட்டங்களை அரசு கொண்டு வந்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் 16 வயது சிறுமியை மிரட்டி 60 வயதுடைய இரண்டு சாமியார்கள் அந்தப் பெண்ணை மூன்று மாதமாக மாறி மாறி கற்பழித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தற்போது சிறுமி கர்ப்பம் ஆன நிலையில் இந்த அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சாமியார்களை பகைத்துக் கொண்டால் பெற்றோர்களுக்கு ஆபத்து வந்து விடுமோ என்று அஞ்சிய அந்த சிறுமி அவர்களுக்கு ஒத்துழைத்து வந்ததும் தெரியவந்துள்ளது. சித்தூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சித்தூர் மாவட்டம் டக்கலி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம் சுப்பையா (55) பாஸ்கர்(60) அதே கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அவதானித்த அவர்கள் அச்சிறுமியை அடைய முயற்சித்தனர். அந்த சிறுமியில் குடும்பத்தில் பிரச்சினை இருப்பதாகவும் எனவே தாங்கள் அதை தீர்த்து வைப்பதாகவும் சிறுமியிடம் அவர்கள் பொய் கூறினர். அவர்களின் வார்த்தைகளை நம்பிய அந்த சிறுமி அவர்கள் இருவரையும் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தார், இரண்டு பேரும் அந்த சிறுமிக்கு தாயத்துகளை மந்திரித்து தருவது சில சடங்குகளை செய்வது என சிறுமியை பயமுறுத்தினர். ஒருகட்டத்தில் தாங்கள் சொல்வதையெல்லாம் கேட்கவில்லை என்றால் பெற்றோர்களில் உயிருக்கு ஆபத்து வந்துவிடும் என அவர்கள் மிரட்டினர்
இதனால் சாமியார்கள் சொல்வதை எல்லாம் சிறுமி கேட்க ஆரம்பித்தார், ஒருவேளை இந்த மந்திரவாதிகளை எதிர்த்துப் பேசினால்பெற்றோருக்கு ஆபத்து வந்து விடுமோ என சிறுமி அஞ்சினாள் இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக சாமியார்கள் ஸ்ரீராம் சுப்பையா, பாஸ்கர் ஆகிய இருவரும் சிறுமியை விரும்பிய போதெல்லாம் பாலியல் பலாத்காரம் செய்து வந்தனர். இதனால் சிறுமி கர்ப்பமானார். தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வீட்டில் சொன்னால் என்னவாகுமோ என்ற பயத்தில் அந்த சிறுமி தான் சந்தித்து வரும் கொடுமைகளை மறைத்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் சிறுமிக்கு உடல் சோர்வு சோம்பல் தலைவலி வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அப்போது பெற்றோர்கள் மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தபோது அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர், மகளிர் போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் நடந்தவற்றை கூறினார். அதனடிப்படையில் போலீசார் சாமியார்கள் ஸ்ரீராம் சுப்பையா, பாஸ்கர் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவம் சித்தூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
