Asianet News TamilAsianet News Tamil

மாணவிகளுக்கு தீராத பாலியல் தொல்லை.. பாபாவுக்கு மாமா வேலை பார்த்த ஆசிரியர்களுக்கு குறி.. சிபிசிஐடி அதிரடி.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சிவசங்கர் பாபா-விற்கு உதவிய ஆசியர், ஆசிரியைகள் யார்? யார்? என பட்டியலெடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் அவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

Sexual harassment to students .. A target to  teachers who worked for Baba's ilegal activitis .. CBCID Action.
Author
Chennai, First Published Jun 16, 2021, 11:09 AM IST

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சிவசங்கர் பாபா-விற்கு உதவிய ஆசியர், ஆசிரியைகள் யார்? யார்? என பட்டியலெடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் அவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுசில் ஹரி பள்ளி மாணவிகளுக்கும் அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளங்களில் புகார் எழுந்த நிலையில், மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவசங்கர் பாபா மீது 3 புகார்கள் அளிக்கப்பட்டு போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றி கடந்த 13 ஆம் தேதி டி.ஜி.பி திரிபாதி உத்தவிட்டார். 

Sexual harassment to students .. A target to  teachers who worked for Baba's ilegal activitis .. CBCID Action.

மாணவிகள் மூலம் பெறப்பட்ட 3 புகார்களின் அடிப்படையில் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீதான பொக்சோ வழக்கு உள்ளிட்ட 3 தனித் தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீசார் துவங்கியுள்ளனர். இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி மூலம் 3 தனிப் படைகள் அமைக்க்ப்பட்டு ஒரு குழு சிவசங்கரை கைது செய்ய டேராடூன் விரைந்துள்ளது. இரண்டாம் குழு சிவசங்கர் பாபா-வின் செல்போன் டவர் லொக்கெஷனை வைத்து இருப்பிடத்தை கண்காணித்து, அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மற்றொரு குழு புகார் அளித்த மாணவிகளிடம் வாக்குமூலங்கள் பெறுவது, சுசில் ஹரி பள்ளிக்குச் சென்று நேரடி விசாரணை நடத்தி வழக்கிற்கு தேவையான ஆதாரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Sexual harassment to students .. A target to  teachers who worked for Baba's ilegal activitis .. CBCID Action.

சுசில் ஹரி பள்ளியில் மொத்தம் 73 ஆசிரியர் ஆசிரியைகள் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில்  மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க சிவசங்கர் பாபாவிற்கு உதவிய ஆசிரியர் ஆசிரியைகள் யார் யார் எனவும், புகார் அளித்துள்ள மாணவிகள் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் பட்டியலெடுத்து அவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரவும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும், மாமல்லபுரம் காவல் துறையினர் தங்களின் முதல் தகவல் அறிக்கையில் ஏற்கனவே சுசில் ஹரி பள்ளியைச் சேர்ந்த பாரதி, தீபா ஆகிய இரு ஆசிரியைகளின் பெயரை சேர்த்துள்ள நிலையில் முதற்கட்ட விசாரணை அவர்களிடமிருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு சம்மன் அனுப்பி விரைவில் விசாரணைக்கு ஆஜராக சி.பி.சி.ஐ.டி போலீசார் அழைப்பு விடுப்பார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios