உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த மாதம் 7 ஆம் தேதி மறைந்தார். அவர் இறந்த 3 ஆவது நாள் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, திமுகவின் உண்மையான தொண்டர்கள் தன்னிடம் தான் உள்ளனர் என்று  கொளுத்திப் போட்டார்.

இதையடுத்து  திமுகவுக்கு எதிராக களம் இறங்கினார். தொடர்ந்து திமுக மற்றும் ஸ்டாலினை அட்டாக் பண்ணிவருகிறார்.

இந்நிலையில் அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் , தலைவர் கருணாநிதியின்  30 ஆம் நினைவு நாளை முன்னிட்டு தலைவரின் உண்மையான உடன் பிறப்புகளின் வேண்டுகோளினை ஏற்று எனது தலைமையில் பெரும் அமைதிப் பேரணி வரும் 5 ஆம் தேதி  காலை 10 மணி அளவில் அண்ணா சிலை அருகில் உள்ள திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகில் இருந்து புறப்பட்டு கருணாநிதியின்  நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்த பேரணியில் பங்கேற்க  தமிகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தர உள்ள உடன்பிறப்புகள் சரியாக  காலை 10 அணி அளவில் அண்ணா சிலை அருகே திரண்டிட அன்புடன்  வேண்டிக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

அமைதிப் பேரணியில்  எந்தவித ஆரவார ஆர்ப்பாட்டத்திற்கு இடம் கொடுக்காமல், காவல் துறையினருக்கும் பொது மக்களுக்கும் எவ்வித இடையூறும் தராமல் நடந்து கொள்ள வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

சென்னை நகருக்குள் காலை 8 மணிக்குள் வந்த சேரும் வகையில் பயணத்தை மேற்கொள்வதுடன் வாகனங்களை தீவுத்திடல் மற்றும்  மெரினா கடற்கரையின் உட்பகுதிகளில் நிறுத்தி விட்டு பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழகிரி குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து  ஏராளமான வாகளங்கள் மற்றும் பேருந்துகள் பேரணியில் வர உள்ள சூழநிலையில் சென்னை நோக்கி பயணிக்கும்போதும் திரும்பும் போதும் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என பாசத்துடன் கேட்டுக் கொள்வதாக குறிப்ட்டுள்ளார்.