திமுக சார்பில் போட்டியிடும் செந்தில்பாலாஜிக்கு இருக்கும் சமமான செல்வாக்கு, அதே பணபலம் என மாஸ் குறையாத செந்தில் நாதன் தான் வேட்பாளர் என அறிவித்துள்ளது அதிமுக.

கடந்த 10 ஆண்டுகள் கரூர் அதிமுகவை தனது கண்ட்ரோலில் வைத்திருந்த செந்தில்பாலாஜி,  தினகரன் அணியுடன் இணைந்து செயல்பட்ட இவர், பல்வேறு நெருக்கடி காரணமாக கடைசியில் திமுகவில் இணைத்து தற்போது கரூர் மாவட்ட பொறுப்பாளராக ஆகி இருக்கிறார். 

கடந்த அரவக்குறிச்சி தேர்தலி பணம் கொடுக்கப்பட்டதாக நிறுத்தப்பட்டு மீண்டும் நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றிப்பெற்ற செந்தில்பாலாஜி தான் தற்போது திமுக சார்பில் அதே தொகுதியில் வேட்பாளராகியிருக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவை தன் வசப்படுத்தி வைத்திருந்த செந்தில்பாலாஜிக்கு எதிராக யாரை நிறுத்துவது என புரியாமலேயே கடந்த சில நாட்களாக குழப்பத்தில் இருந்தது அதிமுக தலைமை. திடீரென, செந்தில்பாலாஜிக்கு ஆப்படிக்க சரியான ஆள் இவர்தான் என பிடித்துக் கொண்டுவந்துவிட்டது அதிமுக. ஆமாம் யாரு அந்த கெத்து கை?  இவர், செந்தில்பாலாஜிக்கு முன்பு இங்கே அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த மாநில பாசறை செயலாளர் செந்தில்நாதன் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் ஏற்கனவே அரவக்குறிச்சியில் தோல்வி அடைந்தவர். 

இவர், தன்னுடைய தோல்விக்கும் காரணம் செந்தில்பாலாஜி என்று நினைத்து தற்போது வரை செந்தில்பாலாஜிக்கு எதிரும் புதிருமாக இருப்பவர் இந்த செந்தில்நாதன். இவர் தற்போது துணை சபாநாயகர் தம்பித்துரையின் அரவணைப்பில் இருப்பதால் இவர் அரவக்குறிச்சி சீட்டு தனக்கு வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்த இவரை விடாமல் பிடித்துக்கொண்டது. செந்தில்பாலாஜிக்கு இருக்கும் சமமான செல்வாக்கு, அதே பணபலம் என மாஸ் குறையாத செந்தில் நாதன் தான் வேட்பாளர் என அறிவித்துள்ளது அதிமுக.

வேட்பாளர்பட்டியல் வெளியாகும் வரை செந்தில்பாலாஜியை எதிர்த்து நிற்க்கப்போகும் அந்த அதிஷ்டசாலி யார் என்கிற பேச்சே கரூரை பொறுத்தவரையில் பரபரப்பாக உள்ளது நிலையில், தற்போது செந்தில்நாதனை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.