முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் போலீசார் சோதனை...!
அதிமுக பக்கம் இழுக்க எடப்பாடி நெருக்கடி...!!  போலீஸ் சோதனை ஏன்?.
முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுகவில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவி வழங்கி அழகு பார்த்திருக்கிறது திமுக தலைமை. செந்தில்பாலாஜி, திமுகவிற்கு சென்றது அதிமுக தங்கள் கட்சியின் வளர்ச்சிக்கு  பாதிப்பாகவே கருதினர். மீண்டும் செந்தில்பாலாஜியை அதிமுக பக்கம் இழுக்கும் முயற்ச்சிக்கான வேலை தான் இந்த சோதனை என்கிறார்கள் திமுகவினர்.

கரூர் அருகே இருக்கும் ராமேஸ்வரப்பட்டியில் இன்று அதிகாலை போலீசார் சோதனை நடத்தி வருகிறரர்கள்.இந்த சோதனை அவரது உறவினர்கள், கட்சியினர் வீடுகளிலும் நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்டத்தில் நடந்து முடிந்துள்ள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பெரும்பாலான திமுக பிரதிநிதிகள் அதிமுகவிற்கு தாவும் அளவிற்கு வேலைகள் நடைபெற்றதாம்.அதன் அடிப்படையில் அதிமுக ஒன்றியச்சேர்மன் பதவிகள், மாவட்ட சேர்மன் பதவிகளை கைப்பற்றியிருக்கிறது.
திருச்சியில், திமுகவில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று நடைபெற்று வரும் நிலையில் செந்தில் பாலாஜி வீட்டிலும் நகர் துணைச்செயலாளர் மகேஸ்வரி வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் ஒரு டிஎஸ்பி உட்பட பதினைந்து போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
செந்தில் பாலாஜி திருச்சியில் நடைபெற்று வரும் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் இருக்கும் நேரத்தில் இந்த சோதனை நடைபெறுவது திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திமுக நடத்தும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை இருட்டடிப்பு செய்வதற்காகவே இது போன்ற சோதனை நடைபெறுவதாக திமுகவினர் சொல்லி வருகிறார்கள்

.
உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டிற்கான செலவுகளில் செந்தில்பாலாஜி பங்கு முக்கியத்துவம் வாய்ந்தாக இருக்கிறது அதனால் தான் முதல்வர் எடப்பாடி பழைய வழக்கை தூசி தட்டி எடுத்து அதன் பேரில் விசாரணை என்று தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் போலீசாரை ஏவிவிட்டிருக்கிறார் என்கிறார்கள் திமுகவின் முக்கிய நிர்வாகிகள்.
ஜெயலலிதா இறந்த பிறகு அமமுக வில் இணைந்து கரூர் மாவட்ட செயலாளர் அமைப்புச் செயலாளர் பதவி வகித்து வந்தார்.  பதினெட்டு எம்எல்ஏக்கள் பதவி பறிப்பு சம்பவத்திற்கு பிறகு மிகுந்த மனவேதனையில் இருந்தவர் சமீபத்தில் திமுகவில் இணைந்து மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார்.

T Balamurukan