Asianet News TamilAsianet News Tamil

ஜெ.,– சசிக்கு இல்லாத பிரச்னையா..? செந்தில் பாலாஜி வருகையால் புலம்பும் கே.என்.நேரு..!

திமுகவுக்கு செந்தில் பாலாஜியை கச்சிதமாக வளைத்து ஸ்டாலினிடம் சபாஷ் வாங்கிவிட்டார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. ஏற்கெனவே ஸ்டாலின் குடும்பத்தில் ஒருவராக வலம் வரும் மகேஷுக்கு இந்த அசைண்மெண்ட் திமுகவில் மேலும் செல்வாக்கை உயர்த்தி இருக்கிறது. இதனால் திருச்சியில் இதுவரை கோலோச்சி வந்த தி.மு.க முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான கே.என்.நேருவுக்கு இறங்குமுகம் தொடங்கி விட்டதாகக் கூறுகிறார்கள். 

Senthil Balaji join dmk...tension KN Nehru
Author
Tamil Nadu, First Published Dec 17, 2018, 2:10 PM IST

திமுகவுக்கு செந்தில் பாலாஜியை கச்சிதமாக வளைத்து ஸ்டாலினிடம் சபாஷ் வாங்கிவிட்டார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. ஏற்கெனவே ஸ்டாலின் குடும்பத்தில் ஒருவராக வலம் வரும் மகேஷுக்கு இந்த அசைண்மெண்ட் திமுகவில் மேலும் செல்வாக்கை உயர்த்தி இருக்கிறது. இதனால் திருச்சியில் இதுவரை கோலோச்சி வந்த தி.மு.க முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான கே.என்.நேருவுக்கு இறங்குமுகம் தொடங்கி விட்டதாகக் கூறுகிறார்கள்.

 Senthil Balaji join dmk...tension KN Nehru

ஏற்கெனவே நேருவை ஓரம் கட்ட மகேஷ் பொய்யாமொழியை திருச்சி பகுதியில் களமிறக்கி இருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் என்ற பேச்சு அடிபட்டு வந்தது. இப்போது எதிர்பார்த்தபடியே மகேஷ் பொய்யாமொழியின் கை அங்கு மேலோங்கி வருகிறது.  

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திருச்சி தி.மு.கவில் குறுநில மன்னர் போல் வலம் வந்தவர் கே.என்.நேரு. பிற மாவட்டச் செயலாளர்களே ஆச்சர்யப்படும் அளவிற்கு பிரமாண்டமான மாநாடு மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தி கருணாநிதி ஆச்சர்யப்பட வைப்பது நேருவின் அதிரடி ஸ்டைல். புள்ளம்பாடி யூனியன் சேர்மனாக தன்னுடைய அரசியல் இன்னிங்சை ஆரம்பித்து 4 முறை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர். மூன்று முறை அமைச்சராக வலம் வந்தவர். கருணாநிதியால் எழுப்பப்பட்ட கே.என்.நேருவின் திருச்சி ராஜ்ஜியம் மு.க.ஸ்டாலினால் சிதைக்கப்பட்டு வருகிறது.

 Senthil Balaji join dmk...tension KN Nehru
 
2016ல் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சியை பிடித்தால், மகேஷ் பொய்யாமொழியா? கே.என்.நேருவா? என்கிற விவாதம் வந்தபோது ஸ்டாலின் நிச்சயமாக மகேஷைத்தான் ஆதரிப்பார் என்று அப்போதே கூறினார்கள். அதனால், மகேஷ் ஆதரவாளர்களும், முக்குலத்தோரும் அந்தத் தேர்தலில் நேருவை ஜெயிக்கவிடக்கூடாது என்றே காய் நகர்த்தி வந்தார்கள். ஆனாலும், இருவரும் வெற்றி பெற்று விட்டார்கள்.  Senthil Balaji join dmk...tension KN Nehru

மகேஷை தற்போது ஸ்டாலின் தரப்பு, நேருவுக்கு எதிராக கொம்பு சீவி விட்டிருக்கிறது. முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த மகேஷுக்கு தி.மு.க-வில் நல்ல எதிர்காலம் தெரிவதால், ரெட்டியார் சமூகத்தை சேர்ந்த நேருவின் நிலை தள்ளாட்டத்தில் இருக்கிறது. அதற்கு எடுத்துக் கட்டாக, சமீபத்திய ஒரு நிகழ்வு... ஊராட்சிகளில், வாக்குச்சாவடி முகவர்களின் செயல்பாடுகள் தொடர்பாக தி.மு.க., சட்டசபை தொகுதி பொறுப்பாளர்களான, எம்.எல்.ஏ., மகேஷ் பொய்யாமொழியும், எழிலரசனும் நேரில் ஆய்வு நடத்தி வருகிறார்கள். Senthil Balaji join dmk...tension KN Nehru

சமீபத்தில், பெரம்பலுார் மாவட்டம், ஆலத்துார் கிழக்கு ஒன்றியத்தில் இருக்கும்  ஊராட்சிகளில் ஆய்வு நடத்தினார்கள். ஆலத்துார் கிழக்கு ஒன்றிய செயலர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அமைச்சர் நேருவின் மாமா. இவரும், ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். திருச்சியில், நேருவுக்கு எதிராக மகேஷ் பொய்யாமொழி அரசியல் செய்து கொண்டிருப்பதால், தனது கெத்தை காட்டுவதற்காக  அவரது மாமா ஊரில் போய் ஆய்வு நடத்தியிருக்கார்’' என புலம்பி வந்தனர். இப்போது செந்தில் பாலாஜியின் வருகையும் நேருவின் இடத்தை அசைத்துப் பார்த்து இருக்கிறது. Senthil Balaji join dmk...tension KN Nehru

மகேஷ் பொய்யமொழியின் திருச்சி எழுச்சி குறித்து கே.என்.நேரு, ’யார் வருகையையும் யாரும் நிறுத்தப் போறதில்லை. நான் என்ன சரஸ்வதி சபதம் கே.ஆர்.விஜயாவா..? யானையில வந்து மாலை போட்டு ’நீ மாவட்ட செயலாளராக இரு... எம்.எல்.ஏவா இரு’னு சொல்றதுக்கு.. இது அரசியல். போட்டி. இங்கு அவரவருடைய செயல்பாடுகளைப் பொறுத்து தான் பதவியும், வெற்றியும் கிடைக்கும். தி.மு.கவுல இருக்குறவனே நான் எப்படா போவேன்னு பாக்குறான். நமக்கு ஆகாதவன் நம்மளை என்ன வாழ்கன்னா சொல்வான். ஜெயலலிதா – சசிகலாவுக்கு இடையில எவ்வளவு பிரச்சினை இருந்துச்சு. எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா என்ன  ஒற்றுமையாக இருந்தாங்களா?’’ என்று புலம்பித் தீர்க்கிறாராம். 

Follow Us:
Download App:
  • android
  • ios