கோவை கார் வெடி விபத்து..! பாஜக தலைவர் அண்ணாமலையை தான் முதலில் என்ஐஏ விசாரிக்க வேண்டும்..! செந்தில் பாலாஜி
தமிழ்நாடு பாஜக தலைவருக்கு அடிப்படை அறிவோ, பக்குவமோ இல்லை என தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் கட்சியை வளர்ப்பதற்காக பாஜக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடக் கூடாது; மக்கள் நலத்திட்டங்களை மேற்கொள்வதன் மூலம்தான் கட்சியை வளர்க்க முடியும் என கூறினார்
கோவை கார் வெடி விபத்து
கோவை கார் வெடி விபத்து தொடர்பாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ,மேற்கு மண்டல காவல்துறை தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கார் வெடி விபத்து ஏற்பட்டவுடன் மிக விரைவாக காவல்துறை உயர் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார். 12 மணி நேரத்தில் காரை ஓட்டிய நபர் மற்றும் குற்றாவளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறினார். அன்று மாலையே அந்த பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் குறிப்பிட்டார்.
12 மணி நேரத்தில் குற்றவாளி கைது
குறிப்பாக 2019 பிறகு 9 நபர்கள் அந்த காரின் உரிமையாளர் மாறியுள்ளதாகவும் தெரிவித்தார். கோவையில் தீபாவளியை எந்த ஒரு இடையூறும் இல்லாமல் மக்கள் கொண்டாடியதாகவும் தெரிவித்தார். ஒரு சில தொலைகாட்சிகள் மற்றும் பத்திரிக்கைகளில் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என எழுதி பதற்றதை ஏற்படுத்துக்கின்றனர் என கூறினார். நாளிதழில் மோசமான தலைப்புகளுடன் செய்தி வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார். கார் வெடிப்பு சம்பவத்தில் வேறு மாநிலங்களின் தொடர்பு உள்ளதால் என் ஐ ஏ விற்கு விசாரணையின் அடிப்படையில் தான் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
கோவை கார் வெடி விபத்து..! ஆர்பாட்டங்கள், போராட்டங்களுக்கு தடை விதிக்க திட்டம்..? காவல் ஆணையர் தகவல்
பிரதமர் வாய் திறக்காதது ஏன்
அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் இச்சம்பவத்தை பூதாகரமாக பார்க்கின்றனர், அதற்கு ஊடகங்கள் இடம் தரக்கூடாது என கேட்டுக்கொண்டார். தீவிரவாத தாக்குதல்கள் நடந்த போது எத்தனை முறை பிரதமர் அது குறித்து பேசியுள்ளார், ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி உயிரிழந்தபோது எத்தனை பாஜக தலைவர்கள் அதுபற்றி பேசினார்கள். எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் பாஜக அரசியல் செய்கிறது; புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது போலீஸுக்கு முன்பே பாஜக தலைவர் அண்ணாமலை சில தகவல்களை வெளியிட்டது ஏன்? எனவே தேசிய புலானாய்வு முதலில் விசாரிக்க வேண்டியது பாஜக நிர்வாகியைத்தான் என குறிப்பிட்டார்.
வெடி பொருட்களை பிலிப்கார்ட், அமேசானில் வாங்கிய அப்ஸர் கான்..! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்
பாஜகவிற்கு எச்சரிக்கை
கோவை கார் வெடி விபத்து நடைபெற்ற பகுதிக்கு எல்லாரும் சேர்ந்து செல்வோம்; உண்மை நிலை என்னவென்று நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவோம் என கூறினார். தமிழ்நாட்டில் கட்சியை வளர்ப்பதற்காக பாஜக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடக் கூடாது; மக்கள் நலத்திட்டங்களை மேற்கொள்வதன் மூலம்தான் கட்சியை வளர்க்க முடியும். பந்த் என்ற பெயரில் மக்களை அச்சுறுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜகவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படியுங்கள்