BREAKING : அமைச்சர் செந்தில் பாலாஜி விடாமல் துரத்தும் அமலாக்கத்துறை.. உச்சநீதிமன்றத்தை நாடியதால் பரபரப்பு.!
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது, சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி கைது செய்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது, சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி கைது செய்தது. அப்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ செய்யப்பட்ட நிலையில் இருதய பகுதியில் 3 அடைப்பு இருப்பது தெரியவந்தது.
இதையும் படிங்க;- செந்தில் பாலாஜியை தொடர்ந்து அடுத்து லிஸ்ட்ல இருக்குறது இவர் தான்? ஆளுங்கட்சியை அலறவிடும் அமர் பிரசாத் ரெட்டி.!
இதனையடுத்து அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி அமைச்சர் செந்தில் பாலாஜி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதனையடுத்து செந்தில் பாலாஜியிடம் 15 நாட்கள் விசாரணை நடத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி 8 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி வழங்கியது. மருத்துவர்களின் அனுமதியோடு விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க;- யார் அமைச்சராக இருக்கணும்! இருக்கக்கூடாது முடிவு செய்வது முதல்வர் தான்! நீங்க இல்ல! ஆளுநரை விளாசும் கனிமொழி.!
அதன்படி கடந்த 3 நாட்களாக அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த தீவிரம் காட்டியது. ஆனால் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், ஓய்வு எடுத்து வருவதாகவும் தொடர்ந்து கூறப்பட்டு வருவதால் விசாரணை நடத்த முடியாமல் அமலாக்கத்துறை தவித்து வருகிறது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க கோரி மேல்முறையீடு செய்துள்ளது. அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை நாளை மறுதினம் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.