Asianet News TamilAsianet News Tamil

செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு வழக்கு.!அமலாக்கத் துறைக்கு கடிவாளம் போடுமா உச்சநீதிமன்றம்?எதிர்பார்ப்பில் திமுக

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை மீட்கும் வகையில், அவரது மனைவி சார்பாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறைக்கு சாதகமாக தீர்ப்பு அளித்தது, இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடைபெறவுள்ளது. 

Senthil Balaji appeal case hearing in Supreme Court today
Author
First Published Jul 21, 2023, 8:50 AM IST

அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி கடந்த மாதம் 13 ஆம் தேதி கைது செய்தது. அப்போது அவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சுமார் 33 நாட்களுக்கு பிறகு செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Senthil Balaji appeal case hearing in Supreme Court today

திருப்பம் கிடைக்குமா செந்தில் பாலாஜிக்கு.?

இந்த காலகட்டத்தில் செந்தில் பாலாஜியை மீட்கும் வகையில் அவரது மனைவி மேனகா நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதையடுத்து, 3வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து 3வது நீதிபதி ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தியது. இந்த உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போபண்ணா மற்றும் எம். எம். சுந்தரேஷ் அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. அத்துடன் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் அதே அமர்வில் இன்று விசாரிக்கப்படுகிறது.  

இதையும் படியுங்கள்

அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள் என முன்கூட்டியே அறிந்து தான் உணவு வகைகள் மாற்றியமைக்கப்பட்டதா.? ஜெயக்குமார்
 

Follow Us:
Download App:
  • android
  • ios