அதிமுகவில் இருந்து பொன்னையன் நீக்கமா..? இபிஎஸ்க்கு நெருக்கடி கொடுக்கும் முன்னாள் அமைச்சர்கள்
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ரகசியங்களை பொன்னையன் பேசியதாக வெளியான ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்க மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவை அலறவிட்ட பொன்னையன்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதவராளர்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன் ஆகியோரை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோரை நீக்கி ஓபிஎஸ் அதிரடி காட்டினார். இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் அதிமுக அடிமட்ட தொண்டர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். அதிமுகவின் நிலை என்ன ஆகும் என வேதனை படும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர் முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த நிர்வாகியுமான பொன்னையனிடம் பேசியதாக ஒரு ஆடியோ பதிவு நேற்று முதல் சமூக வலை தளத்தில் பரவி வருகிறது. அந்த ஆடியோ அதிமுக மூத்த நிர்வாகிகளை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
எல்லாமே சாதி தான்.. அவர் கையில அதிமுக இருக்கு.. எடப்பாடி பாவம்.! பொன்னையன் பேசும் வைரல் ஆடியோ
சொத்துக்களை காப்பாற்ற திமுகவிற்கு ஆதரவு
அந்த ஆடியோவில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி திமுகவை திட்டுவதில்லையென்றும், அமைச்சர் துரைமுருகன் உதவியோடு கல்குவாரி கான்டிராக்ட் எடுத்துள்ளதாகவும், இதன் மூலமாக மாதம் 2 கோடி ரூபாய் வருவமானம் வருவதாக தெரிவித்துள்ளார். இதே போல முன்னாள் அமைச்சர் தங்கமணியும் ஸ்டாலினை ஆதரிக்க தொடங்கிவிட்டதாக கூறியுள்ளார். தங்களிடம் உள்ள சொத்தை காப்பாற்ற எந்தவித திமுக எதிர்ப்பும் காட்டவில்லையென கூறியுள்ளார். மேலும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தனது மகனை விட 4 வயது சிறியவன் என்றும் எப்போதும் குடித்துக்கொண்டே இருப்பான் என் தெரிவித்துள்ளார். தங்களது சொத்துக்களை காப்பாற்ற தான் அதிமுக மூத்த தலைவர்கள் குறிக்கோளாக இருப்பதாகவும் கூறியுள்ளார். அதிமுக கொள்கைக்காகவோ, ஜெயலலிதா,எம்ஜிஆர் மீது மரியாதையோ, மதிப்போ இல்லையென தெரிவித்திருந்தார்.
சி.வி.சண்முகம் கையில் இத்தனை எம்எல்ஏக்களா? அப்படினா இபிஎஸ் அவ்வளவுதானா.. பூதாகரமான பொன்னையன் ஆடியோ.!
அதிமுகவில் இருந்து பொன்னையன் நீக்கம்..?
அதிமுகவில் சாதி வாரியாக சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும் இதனை வைத்து எடப்பாடி பழனிசாமி மிரட்டப்படுவதாக தெரிவித்துள்ளார். சி.வி.சண்முகம் ஒருபுறமும், தங்கமணி, வேலுமணி மறுபுறமும் சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு செயல்படுவதாக தெரிவித்திருந்தார். இந்த ஆடியோ சமூக வலை தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுகவில் இருந்து பொன்னையனை நீக்க வேண்டும் என மூத்த தலைவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவின் பொதுக்குழு தொடர்பாக விமர்சித்தும், மூத்த தலைவர்களை பற்றி பொன்னையன் பேசியது ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பொன்னையனை நீக்குவாரா? அல்லது எப்போழுதும் போல் அமைதி காப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தநிலையில் இந்த ஆடியோ தனது குரல் இல்லையென்றும் யாரோ மிமிக்கிரி செய்துள்ளதாக பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
மனு கொடுத்த பெண்ணை தலையில் தாக்கிய தமிழக அமைச்சர்...!பதவி விலக கெடு விதித்த அண்ணாமலை