MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ்.. புதிய முதலமைச்சர் யார் தெரியுமா? முழு விவரம்!

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ்.. புதிய முதலமைச்சர் யார் தெரியுமா? முழு விவரம்!

மணிப்பூரில் ஓராண்டுக்கு பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் முதலமைச்சராக யும்னம் கெம்சந்த் சிங் பதவியேற்க உள்ளார். இது குறித்த முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar A
Published : Feb 04 2026, 05:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ்
Image Credit : Asianet News

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ்

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை உடனடியாக ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி பிரிவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டு கலவரம் மூண்டது. இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 60,000க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்தனர். அங்கு ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டு இருந்தாலும் இன்னும் அங்கு நிலைமை சீராகவில்லை.

யும்னம் கெம்சந்த் சிங் முதல்வராக தேர்வு

மணிப்பூர் முதலமைச்சராக இருந்த பைரன் சிங் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மணிப்பூரில் கடந்த ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் தான் குடியரசுத் தலைவர் ஆட்சி இன்று (பிப்ரவரி 4) வாபஸ் பெறப்பட்டுள்ளது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் யும்னம் கெம்சந்த் சிங் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துணை முதல்வர்கள் யார்?

யும்னம் கெம்சந்த் சிங்கிற்கு ஆதரவாக இரண்டு துணை முதல்வர்கள் இருப்பார்கள், ஒருவர் குகி-சோ சமூகத்திலிருந்தும், மற்றொருவர் நாகா சமூகத்திலிருந்தும் இருப்பார்கள். கங்போக்பி எம்.எல்.ஏ. நெம்சா கிப்ஜென் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டணிக் கட்சியான நாகா மக்கள் முன்னணி, நாகா துணை முதல்வரை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யார் இந்த கெம்சந்த் சிங்?

62 வயதான கெம்சந்த் சிங், மெய்தி சமூகத்தைச் சேர்ந்தவர் மற்றும் பொறியாளர். இவர் முந்தைய பைரன் சிங் அரசாங்கத்தில் நகராட்சி நிர்வாக அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். 2022ல், முதல்வர் பதவிக்கான போட்டியாளராக இவர் உருவெடுத்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்தியா
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
எழுத்து தேர்வு கிடையாது... நேர்காணல் மட்டும்..! RBI-ல் மாஸ் வேலைவாய்ப்பு! மாதம் ₹4.10 லட்சம் சம்பளம்
Recommended image2
EPFO New Rules: PF வாடிக்கையாளர்களுக்கு செம்ம குட் நியூஸ்! வெறும் 3 நாளில் வங்கிக் கணக்கில் பணம்..
Recommended image3
Vijay Prashant Kishor: விஜய்க்கு ஆலோசனை கொடுத்த பிரசாந்த் கிஷோர்.. இப்போது பாஜக கோட்டையிலேயே நேரடி களம்!
Related Stories
Recommended image1
கலவரத்திற்கு பின் முதல் முறையாக மணிப்பூரில் கால் வைத்த பிரதமர் மோடி..! ரூ.7300 கோடியில் நலத்திட்டம்
Recommended image2
கலவர பூமியில் கால் பதிக்கும் பிரதமர்! மணிப்பூரில் ரூ.8,500 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved