இந்நிலையில் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தமது அனைத்து சொத்துக்களையும் துளசி தாஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உயிலாக எழுதி வைத்துள்ளார்.
பொதுவாக பொதுமக்கள் தரும் நன்கொடையில் இருந்து கட்சியை வளர்த்த வ்பரலாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு. அந்தக் கட்சிக்கு பலரும் தங்களது சொத்துக்களை நன்கொடையாக எழுதி கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், கோயம்புத்தூரில் வசிக்கும் மூத்த தம்பதியர் தங்களின் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான அனைத்து சொத்துக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உயிலாக எழுதி வைத்துள்ளனர். கோவையில் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் துளசி தாஸ். ஓய்வுபெற்ற மின் ஊழியரான துளசிதாசுக்கு 2 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். இதில் மகன்கள் மனவளர்ச்சி குன்றியவர்கள். பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின் துளசி தாஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தமது அனைத்து சொத்துக்களையும் துளசி தாஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உயிலாக எழுதி வைத்துள்ளார். தான் நேசித்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அனைத்து சொத்துக்களையும் துளசி தாஸ், மலர்க்கொடி தம்பதியினர் வழங்கியிருப்பது கட்சி தோழர்களிடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 80 வயதாகி மூப்பு அடைந்துவிட்ட துளசி தாஸ், வாழ்க்கையின் கடைசி நாட்களில் உறவுகள், அரசு என்பதை தாண்டி தான் நேசித்த கட்சி தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
