sengottayan criticizing mla resignation

எய்ம்ஸ் விவகாரத்தில் ராஜினாமா என எம்எல்ஏக்கள் சொல்வது சும்மா வாழப்பாடியாரை தவிர யாரும் தங்கள் கோரிக்கைக்காக பதவியை ராஜினாமா செய்ததில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைத்தே தீர வேண்டும் இல்லாவிடில், மதுரையை சேர்ந்த அனைத்து எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்வோம் என்று திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ போஸ் எடப்பாடி அதலமயிலான அரசுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக அதிமுகவின் மதுரை மாவட்ட எம்எல்ஏக்கள் 8 பேர் மற்றும் மாற்றுக் கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் என அனைவருமே தங்களது பதவியை ராஜினாமா செய்யத் தயங்க மாட்டோம் என இன்று காலை எச்சரிக்கை விதித்திருந்திருந்தார். 

இதற்கு முன் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் மிரட்டியுள்ளார். 

இவர்களின் இந்த மிரட்டலுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் செங்கோட்டையின், எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பதவியை ராஜினாமா செய்யப்போவதாக எம்எல்ஏக்கள் சொல்வதெல்லாம் சும்மா, அவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள்.

மேலும் காவிரி பிரச்சினைக்காக 1992ல் தனது மத்திய அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்தவர் காங்கிரஸ் சீனியர் தலைவர்களில் ஒருவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி, அவரைப்போல யாரும் தங்கள் கோரிக்கைக்காக தங்களது பதவியை ராஜினாமா செய்ததில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.