Asianet News TamilAsianet News Tamil

கூவத்தூர் துரோக அரசே ... ஆயிரங்கள் வழங்க வக்கில்லையா...? விலகிசெல்... செந்தில் பாலாஜி காட்டம்

sendhilbalaji open challenge against tamilnadu govt
sendhilbalaji open challenge against tamilnadu govt
Author
First Published Jan 5, 2018, 8:35 AM IST


மத்திய பணிமனையில், தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் பேருந்துகள் இயக்கம் - 145 பேருந்துகளில் 50 பேருந்துகள் இதுவரை இயக்கம்... பல இடங்களில் பேருந்துகளை நிறுத்தி போராட்டம் நடந்து வரும் நிலையில் பல மணி நேரம் கடந்தும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்தது. போக்குவரத்து ஊழியர்களின் சம்பள உயர்வுக்கான பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து நடைபெற்று வரும் போராட்டத்தின் எதிரொலியாக தம்ழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெருந்துகளின்றி பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளனார்கள்.

தமிழக போக்குவரத்துத்துறையில் 10 ஆண்டுகளாக பிரச்னை, ஏன் என்று நிதித்துறை கவனிக்கவில்லை . அரசின் குழப்பமான கணக்கால் 1.47 லட்சம் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் 95% தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

sendhilbalaji open challenge against tamilnadu govt

இந்தச் சூழ்நிலையில் சென்னை குரோம்பேட்டை பணிமனையில் நேற்று மீண்டும் 13ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாகப் போக்குவரத்து ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 36 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் சுமார் ஆறு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தையில் அரசுத் தரப்பிலிருந்து 2.44 சதவிகிதம் ஊதிய உயர்வு அளிப்பது குறித்து அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், தங்களுக்கு 2.57 சதவிகித ஊதிய உயர்வு நிர்ணயிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசின் முடிவை அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், சிஐடியு, தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

sendhilbalaji open challenge against tamilnadu govt

மேலும், “ஊதிய உயர்வு குறித்து போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை கருணையுடன் பார்க்க அரசு தவறிவிட்டது. அரசே கஷ்டத்தை தாங்க முடியாது என்றால் சாதாரண தொழிலாளி கஷ்டத்தை எப்படி தாங்குவான்? எனவே 2.44 காரணி ஊதிய உயர்வை எந்தக் காலத்திலும் நாங்கள் ஏற்க மாட்டோம். தொடர்ந்து நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் 95% தொழிலாளர்கள் பங்கேற்பார்கள்” என்று சிஐடியு, தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. வேலைநிறுத்தத்தில் 13 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கலந்துகொள்வதாக அறிவித்துள்ளன. மேலும் தொழிலாளர்கள் சங்கப் பலகையிலும், ‘பேச்சுவார்த்தை தோல்வி எனவே தொடர்ந்து வேலை நிறுத்தம் நடைபெறும்’ என்று எழுதப்பட்டுள்ளது.

sendhilbalaji open challenge against tamilnadu govt

இந்நிலையில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது; தன் ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைக்கும் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கையினை ஏற்று 2.57 சதவீத ஊதிய உயர்வினை வழங்கி தொழிலாளர்களையும் அவர்களது குடும்பங்களையும் காக்கவும், பொதுமக்கள் நலன் பேணவும் கூவத்தூர் பழனிசாமி துரோக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனது மற்றொரு டிவிட்டில்... ஆர்.கே நகரில் ஓட்டுக்கு 6 ஆயிரம் கொடுக்க முடிந்த துரோக அரசால் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஆயிரங்கள் வழங்க வக்கில்லையா...? விலகிசெல்..

இவ்வாறு கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios