மோடி படம் என்னாச்சு? மோடி படத்தை போட்டு மக்களிடம் ஓட்டு கேட்க அதிமுகவினர் தயாரா இருக்கீங்களா சொல்லுங்க? என்று அதிமுகவினருக்கு சவால் விட்டு பேசியுள்ளார் அரவக்குறிச்சி வேட்பாளர் செந்தில் பாலாஜி.

அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வேலாயுபாளையம் பகுதியில் ஓட்டுகேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டபோது பேசிய அவர், ஆளும் கட்சியினர் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்பதற்கு அவர்கள் எந்த திட்டங்களையும் செய்யவில்லை. ஆனால், அவர்கள் ஒட்டு கேட்க்கும் போது மட்டும் என்னை திட்டி,  திட்டியே ஓட்டு கேட்கிறார்கள். 

திமுக ஆட்சிக்கு வந்ததும்  காவிரி ஆற்றில் தடுப்பணை அமைக்கப்படும் வேலாயுதபாளையத்தில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் இது போன்ற, திமுக தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்ட அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார்.

மேலும் அவர்,  கரூர் எம்.பி. தொகுதி வேட்பாளர் தம்பிதுரை இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தால், எல்லா இடங்களிலும் எதிர்ப்புகள் கிளம்பும் என்பதால் அவரை பிரச்சாரத்திற்கு வர வேண்டாம் என்று எடப்பாடியே  நிறுத்திவிட்டார். ஆனால் திமுக  எம்.பி வேட்பாளர் ஜோதிமணி எனக்காக ஓட்டு கேட்டு என்னுடன் பிரச்சாரம் செய்து வருகிறார். 

அதேபோல நாங்கள் ராகுல்காந்தியின் படத்துடன் மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறோம். ஆனால், அதிமுக எம்.பிகள் யாருமே அதிமுக வேட்பாளர் சட்டசபை வேட்பாளாருக்கு ஓட்டு கேட்க வரவில்லை, அவர் எங்கே போனார். மோடி படம் என்னாச்சு? மோடி படத்தை போட்டு மக்களிடம் ஓட்டு கேட்க அதிமுகவினர் தயாரா இருக்கீங்களா சொல்லுங்க? என்று அதிமுகவினருக்கு சவால் விட்டு பேசினார்.