Asianet News TamilAsianet News Tamil

ஏட்டிக்கு போட்டியா செயல்படுவதால் எந்த பயனும் இல்லை... ஓபிஎஸ்-ஐ சாடிய செல்லூர் ராஜு!!

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் இணைய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 

sellur raju slams panneerselvam regarding his actions against admk members
Author
Madurai, First Published Jul 15, 2022, 10:01 PM IST

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் இணைய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் பதவி கேட்காமலேயே எடப்பாடி பழனிச்சாமி எனக்கு கழக அமைப்பு செயலாளராக பதவி வழங்கினார். அதிமுகவுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் நான் விசுவாசமாக செயல்படுவேன். நம்மை நம்பி இருக்கும் தொண்டர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என ஜெயலலிதா கூறினார். எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக்க பாடுபடுவேன். அதிமுக தொண்டரின் புனித ஸ்தலமாக தலைமை அலுவலகம் விளங்குகிறது.

இதையும் படிங்க: பொன்னையனுக்கு வேட்டு வைத்த நாஞ்சில் கோலப்பனுக்கு எடப்பாடி ஆப்பு ... ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இன்றும் நீக்கம்.

sellur raju slams panneerselvam regarding his actions against admk members

அப்படிபட்ட இடத்தில் வன்முறை சம்பவம் நிகழ்ந்தது வருத்தமளிக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஒன்றுபட்டு இருக்கிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வோம். ஒ.பன்னீர்செல்வம் ஏட்டிக்கு போட்டியாக செயல்படுவதால் எந்தவொரு பயனும் இல்லை. யார் பக்கம் கட்சி இருக்கிறது என்பதை ஒ.பன்னீர்செல்வம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: போலீஸ் உதவியுடன், போலீஸ் வாகனத்திலேயே கற்கள், பெட்ரோல் குண்டுடன் வந்தார் ஓபிஎஸ்... பன்னீர் மீது பகீர் புகார்.

sellur raju slams panneerselvam regarding his actions against admk members

அதிமுகவில் சாதி ரீதியாக பதவி வழங்குவதில்லை, அதிமுகவில் சாதி இல்லை. ஒ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி வருத்தம் தெரிவிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி பின்னால் யார் வேண்டுமானாலும் வரலாம். அதிமுகவை நம்பியவர்கள் கெட்டதில்லை, அதிமுகவை நம்பாமல் கெட்டவர்கள் தான் உள்ளனர். ஒ.பி.ரவீந்திர நாத்தை நீக்கியதால் அதிமுகவுக்கு எந்தவொரு இழப்பும் இல்லை. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் கட்சியின் பலம் நிர்ணயம் செய்யப்படாது. தொண்டர்களின் பலமே அதிமுக என்று தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios