அண்ணாமலைக்கு எதிராக பேசாதது ஏன்.? ரெய்டு வந்திடும் என்ற அச்சமா.? திமுகவை விளாசும் செல்லூர் ராஜூ

பெரிய பதவியில் இருந்தாலும் அண்ணாவைப் பற்றி ஒருவன் இழிவாக பேசுகிறான் என்றால் அமலாக்கத்துறை வந்துவிடும் என்ற பயத்தில் மௌனம் காக்கிறீர்களே நீங்கள் எல்லோரும் நாசமாக போவீர்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு  சாபம் விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 

Sellur Raju says DMK did not criticize Annamalai due to fear of raid KAK

அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட விளாங்குடி பகுதியில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், பேரறிஞர் அண்ணா ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் ஒரு நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர் தன்னுடைய உழைப்பாலும் தன்னுடைய முயற்சியாலும் படித்தவர் முதுகலை பட்டம் வாங்கியவர். பச்சையப்பன் கல்லூரியில் படித்த அவர் ஆங்கிலத்தில் சரளமாக பேசக் கூடியவர் சிறந்த பேச்சாற்றல் கொண்டவர் அதனால் தான் தனது தளபதியாக பெரியார் ஏற்றுக்கொண்டார்.

Sellur Raju says DMK did not criticize Annamalai due to fear of raid KAK

 திமுகவை வளர்த்தவர் எம்ஜிஆர்

இன்றைக்கு பேரறிஞர் அண்ணா மற்றும் பெரியார் குறித்து இழிவாக பேசுகிறார்கள், நான் பிறப்பதற்கு முன்பாக நீங்கள் எல்லாம் பிறப்பதற்கு முன்பாக இந்த நாட்டிலே ஒரு தெருவில் நடக்க முடியாது நடந்தால் தீட்டு, பேசினால் தொட்டால் தீட்டு,  பட்டால் பாவம் என்று இருந்த நிலையை மாற்றிய இரண்டு பேரும் தலைவர்கள்  நம்முடைய பேரறிஞர் அண்ணாவும் தந்தை பெரியாரும், கருத்து வேறுபாடால் தான் திராவிட முன்னேற்ற கழகத்தொடங்கினார் அண்ணா, திமுக தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எம்ஜிஆர் மூலமாகவே பட்டி தொட்டி எங்கும் திமுக பரவத் தொடங்கியது. 

அந்த திமுகவை வளர்த்தவர் எம்ஜிஆர் தன்னுடைய படங்களில் அனைத்தையும் பேரறிஞர் அண்ணா உடைய கொள்கைகளையும் சித்தாந்தங்களையும் கட்சியின் கொடியையும் காட்டி வளர்த்தவர் தான் எம்ஜிஆர், இவ்வாறாக திமுகவை வளர்த்தவரை தூக்கி  எரிந்தார் கலைஞர்,  திமுகவிற்கு அதிமுகவிற்கும் வாய்க்கால் தகராறு எதுவும் கிடையாது.  தன்னுடைய உழைப்பை ரத்தத்தை வியர்வையாக சிந்தி கட்சியை வளர்த்தவர் எம்ஜிஆர் அவரை தூக்கி எறிந்த கட்சி தான் திமுக.   தன்னுடைய கட்சிக்கும் அண்ணாவின் பெயரை சூட்டி கட்சியின் கொடியிலும் அண்ணாவை பொருத்தவர் தான் அதிமுகவை கொண்டு வந்த எம்.ஜி.ஆர். 

Sellur Raju says DMK did not criticize Annamalai due to fear of raid KAK

அண்ணாவுடைய ஆன்மா உங்களை மன்னிக்காது

எம்ஜிஆர் இறந்த பிறகு இனி அதிமுக இருக்காது என்று எண்ணிய நிலையில் தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறு அடி பாயும் என்கின்ற நிலையில் அம்மா அவர்கள் கட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். ஜெயலலிதா ஆட்சி கால கட்டத்தில் எண்ணற்ற பல திட்டங்களை கொண்டு வந்தார்.   அண்ணா பிறந்த நாளை அதிமுக கொண்டாடி வரக்கூடிய நிலையில், திமுகவினர் ஒரு இடத்தில் கூட கொண்டாடவில்லை,  அண்ணா குறித்து (அண்ணாமலை) ஒருவர் கேவலமாக பேசும் போது திமுகவினர் துளி அளவு கூட கொதித்து எழவில்லை. மானம் ரோசம் சூடு சொரணை உங்களுக்கு இருக்கிறதா அண்ணாவுடைய ஆன்மா உங்களை மன்னிக்குமா? தந்தை பெரியாருடைய ஆன்மா உங்களை மன்னிக்காது . 

எங்களுடைய கூட்டணியில் இருந்தாலும் ஏன் நாங்கள் குரல் கொடுக்கிறோம் (அண்ணாமலைக்கு எதிராக) எங்களது கட்சிக்கு அண்ணாவுடைய பெயர் இருக்கக்கூடிய வேளையில்,  எங்களது கொடியில் அண்ணா எங்களது கொள்கை அண்ணாயிசம் என்று இருக்கக்கூடிய வகையில் யாரு தடுத்தாலும் கடவுளே தடுத்தாலும் விடமாட்டோம்.

Sellur Raju says DMK did not criticize Annamalai due to fear of raid KAK

மிரட்டல்களுக்கு பயப்படமாட்டோம்

எம்ஜிஆர் தொண்டன் சும்மா இல்லை துப்பாக்கிக்கே  டாட்டா காட்டியவர் எம்ஜிஆர்.  ஆண்களுடைய அரசியல் சாசனத்தில் தனிப்பெண் சிங்கமாக இருந்து வந்த ஒப்பற்ற வாரிசாக எடப்பாடியாருடைய தம்பிகளாக இருக்கக்கூடிய நாங்கள் உங்களுடைய உருட்டல் மிரட்டல் களுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம். அண்ணா கஷ்டப்பட்டு உருவாக்கிய கட்சி திமுக,  ஆனால் இன்று அதனுடைய தலைவர்கள் மற்றும் பேச்சாளர்கள் நட்சத்திர ஹோட்டல்களில் தங்குகின்றார்கள்.  Sellur Raju says DMK did not criticize Annamalai due to fear of raid KAK

சாபம் விட்ட செல்லூர் ராஜூ

ஆனால் கட்சியை வளர்த்த அண்ணா செல்லும் இடங்களில் எல்லாம் கட்சி தொண்டர்களுடைய வீட்டில் தான் தங்கி மக்களோடு மக்களாக இருந்தார். இன்று நீங்கள் பெரிய பதவியில் இருந்தாலும் அண்ணாவைப் பற்றி ஒருவன் இழிவாக பேசுகிறான் என்றால் அமலாக்கத்துறை வந்துவிடும் என்ற பயத்தில் மௌனம் காக்கிறீர்களே நீங்கள் எல்லோரும் நாசமாக போவீர்கள் என்று சாபம் விடத் தொடங்கினார். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால் திமுக செய்த ஊழல் அனைத்தும் வெளியில் தெரிந்து விடும் என்பதற்கு பயந்து தான் செந்தில் பாலாஜி நீக்காமல் ஸ்டாலின் வைத்துள்ளார். 

இதையும் படியுங்கள்

மீண்டும் தமிழகத்தில் களம் இறங்கிய வருமான வரித்துறை..! 30 இடங்களில் அதிரடி சோதனையால் பரபரப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios