மீண்டும் தமிழகத்தில் களம் இறங்கிய வருமான வரித்துறை..! 30 இடங்களில் அதிரடி சோதனையால் பரபரப்பு

தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கன்வேயர் பெல்ட் உட்பட உபகரணங்களை சப்ளை செய்துவரும் நிறுவனங்கள், செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி மற்றும் அவருடன் தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
 

Income Tax department raided several places in Chennai including the house of Senthil Balaji assistant KAK

சென்னையில் வருமான வரித்துறை சோதனை

வருமான வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, சகோதரர்  வீடு உள்ளிட்ட பல இடங்களில் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சோதனையானது நடைபெறுவதாக கூறப்படுகிறது. சென்னையில் துரைப்பாக்கம் பள்ளிக்கரணை எண்ணூர் நாவலூர் உள்ளிட்ட  இடங்களில் வருமானவரித்துறை சோதனையில் நடத்தி வருகின்றனர்.

Income Tax department raided several places in Chennai including the house of Senthil Balaji assistant KAK

யார்.? யார்? வீடுகளில் சோதனை

அந்தவகையில், பொன்னேரி வெள்ளிவாயில் சாவடியில் உள்ள சென்னை ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனம், நாவலூரில் உள்ள டேட்டா பேட்டர்ன்ஸ் வருமான வரித்துறை சோதனை (இந்தியா) லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர், இயக்குநர்கள் வீடுகளிலும் சோதனையானது நடைபெறுகிறது.

மேலும்  அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெறுகிறது.  தேனாம்பேட்டை வெங்கடரத்தினம் தெருவில் உள்ள காசியின் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கன்வேயர் பெல்ட் உட்பட உபகரணங்களை சப்ளை செய்துவரும் நிறுவனங்களை குறிவைத்து சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படியுங்கள்

புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவாரா செந்தில் பாலாஜி.! ஜாமின் மனு மீது இன்று முக்கிய தீர்ப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios