மதுரையில் பெண்களுக்கான சைக்கிள் பேரணி பயிற்சி முகாமில் கலந்து கொண்டு அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும் போது, "வரும் காலத்தில் பெண்கள் அதிமுகவை தலைமை ஏற்று நடத்தக்கூடிய காலம் வரும்" எனப் பேசினார். இது அதிமுகவினர் மத்தியில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து விளக்கமளித்த செல்லூர் ராஜூ, "வாக்குச்சாவடிக்கு 5 பேர் வீதம் பெண்கள் எடுக்கப்பட்டு, அவர்கள் இருசக்கர வாகனத்தில் வாக்காளர்களை சந்திக்கப் போகிறார்கள். தேர்தல் வரும் பொழுது இப்படி போட்டிப் போட்டு வேலை செய்யும் பெண்களுக்கும், ஒரு காலத்தில் வாய்ப்பு வரும் என்று சொன்னேன். இதில் என்ன தவறு? என தெரிவித்தார்.

அமைச்சர் செல்லூர் ராஜுவின் இந்த பேச்சுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்  செயலாளர் டி.டி.வி.தினகரன் வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளார்களிடம் பேசிய அவர், அதிமுகவுக்கு ஒரு பெண் தலைமை தாங்கும் காலம் வரும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு சொல்லியிருப்பது விரைவில் அக்கட்சிக்கு சசிகலா தலைமை ஏற்பார் என்பது தான் என்றும், தமிழக அமைச்சர்களிலேயே செல்லூர் ராஜு ஒருவருக்குத் தான் கொஞ்சமாவது மனசாட்சி உள்ளது என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்