அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைவதை தவிர்த்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசுவதாகவும், விரைவில் ஒன்றிணைந்து செயல் படுவோம் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அதிமுக தற்போது எடப்பாடி அணி, ஒபிஎஸ் அணி, தினகரன் அணி என மூன்றாக செயல்பட்டு வருகிறது. ஆனாலும் தினகரன் அணியை ஒரு பொருட்டாக யாரும் எடுத்து கொள்ளவில்லை.

காரணம் எடப்பாடி தரப்பில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் ஒபிஎஸ் தரப்பில் ஆதரவு கோரி வருகின்றனர்.

ஆனால் ஒபிஎஸ் தரப்போ சசிகலா தரப்பை நீங்கள் முற்றிலும் நீக்கவில்லை என கோரி ஒன்றாக இணைய மறுப்பு தெரிவித்து வருகிறது.

மேலும் எடப்பாடி தலைமையிலான ஆட்சியை எதிர்த்து வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகவும் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இருந்தாலும் அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைவதை தவிர்த்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசுவதாகவும், விரைவில் ஒன்றிணைந்து செயல் படுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், எங்களிடம் இருந்து வழிமாறி சென்றவர்கள் விரைவில் ஒரே அணியாக ஒன்றிணைந்து செயல்படுவோம் எனவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி எளிமையாக இருப்பதால் அவரை பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் சந்தித்து பேசலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.