தமிழகத்தின் அரைவேக்காடு அண்ணாமலை மட்டுமே.! அவர் ஒரு கத்துக்குட்டி -இறங்கி அடிக்கும் செல்லூர் ராஜு

தேர்தல் முடிந்து வாக்குப்பட்டியை திறந்த பிறகு தான் பாஜகவிற்கு தமிழக மக்கள் எவ்வளவு தூரம் ஆப்பு வைத்திருக்கிறார்கள் என்று தெரியும் என கூறிய செல்லூர் ராஜூ,  தேர்தலுக்குப் பிறகு தான் அண்ணாமலை கட்சி தலைவராக தொடர்வாரா என்பது அப்போது தான் தெரியும் என கூறினார்.  

Sellur Raju criticized Annamalai as having no political merit KAK

நீட் ரகசியம் என்ன.?

மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மதுரை கோச்சடை பகுதியில் இரண்டு புதிய ரேஷன் கடைகளை மக்கள் பயன்பாட்டிற்காக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு துவங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  கடந்த 10 ஆண்டு காலத்தில் மதுரைக்கு அடையாளமாக இருக்கும் அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்தது  அதிமுக கட்சி காலகட்டத்தில் தான் என தெரிவித்தார்.

ஆனால் இந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சி கால கட்டத்தில் கொண்டுவரப்பட்டது ஜல்லிக்கட்டு அரங்கம் ஒன்று மட்டுமே என விமர்சித்தார்.  நீட் தேர்வு வருவதற்கு காரணமாக இருந்தது கூட திமுக கூட்டணி தான் என்றும்,  நீட் விலக்கிற்கு சூட்சுமம் தெரியும், ரகசியம் தெரியும் என்று சொன்ன உதயநிதி தற்போதைய நிலை என்ன ?? என கேள்வி எழுப்பினார்.  தமிழ் மக்களுடைய உரிமையும், கச்சத்தீவு காவிரி முல்லை பெரியாறு உள்ளிட்ட அனைத்தும் திமுக காலகட்டத்தில் பிரச்சனைகள் தான் உள்ளது என கூறினார். 

Sellur Raju criticized Annamalai as having no political merit KAK

அண்ணாமலை தான் அரைவேக்காடு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அரைவேக்காடு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் ஒரு அரைவேக்காடு என்றால் அது அனைவருக்கும் தெரியும் அது அண்ணாமலை தான். ஒரு மாநிலத்துடைய தலைவராக இருந்து கொண்டு அரசியலில் கத்துக்குட்டியாக இருக்கக்கூடிய அண்ணாமலை அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார்.  மறைந்த தலைவர்களைப் பற்றி அவதூறாக அவ்வப்போது பேசி வருகிறார். தேர்தல் முடிந்து வாக்குப்பட்டியை திறந்த பிறகு தான் பாஜகவிற்கு தமிழக மக்கள் எவ்வளவு தூரம் ஆப்பு வைத்திருக்கிறார்கள் என்று தெரியும் தேர்தலுக்குப் பிறகு அண்ணாமலை இருப்பாரா தொடர்வாரா என்பது அப்போது தெரியும்.

Sellur Raju criticized Annamalai as having no political merit KAK

அண்ணாமலைக்கு தகுதி இல்லை

ஒரு அரசியல் இயக்கம் என்றால் எவ்வாறு இருக்க வேண்டும் ?? அனைத்து சமூகத்தினரையும் அனைத்து மதத்தினரையும் அரவணைத்துப் போகக்கூடிய ஒரு கட்சியாக இருக்க வேண்டும். ஆனால் பாஜக அவ்வாறு கிடையாது. பாஜகவிற்கு வரக்கூடிய கூட்டங்கள் அனைத்தும் அழைத்து வரப்படக்கூடிய கூட்டம் தானாக சேர்ந்த கூட்டம் அல்ல. அண்ணாமலை ஏற்கனவே அண்ணாவைப் பற்றி பேச என்னிடம் வாங்கிய கட்டியிருக்கிறார். மறைந்த தலைவர்கள் பற்றி கூறும் அண்ணாமலைக்கு கொஞ்சம் கூட அரசியல் தகுதி இல்லை என்று தான் அர்த்தம் என கடுமையாக விமர்சித்தார்.  

தொடர்ந்து பேசிய அவர் பாஜகவை அதிமுக ஆதரித்ததால் தான் மதுரையில் சிறுபான்மையினருடைய ஓட்டு எங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை. சிறுபான்மையினருடைய வாக்குகள் இந்த ஆண்டு நடைபெறக்கூடிய தேர்தலில் எங்களுக்கு வந்துவிடும் என்கின்ற பயத்தினால் தான் நாங்கள் பாஜகவிற்கு துணை போவோம் என திமுகவினர் தெரிவிப்பதாக செல்லூர் ராஜூ தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

RED ZONEல் மோடியின் தேர்தல் பிரச்சார வாகன பேரணி..! கோவையை கட்டுப்பாட்டில் எடுத்தது எஸ்பிஜி


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios