நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, எங்களால் தான் அதிமக ஆட்சிக்கு வந்தது என்றும், ஜெயலலிதாவையே எங்கள் தலைவர் எதிர்த்து கேள்வி கேட்டவர் எனறும் பேசினார்.

மேலும் அதிமுகவின்வின்  37 எம்.பி.ககளால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்றும் அவர்கள் அனைவருமே வேஸ்ட்  என்றும் கிண்டலடித்தார்.


இந்த பேச்சு அதிமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சேலம் அதிமுக எம்பி பன்னீர்செல்வம் கூறுகையில், 'தமிழகத்தில் தனித்து நின்று 37 இடங்களில் வெற்றி பெற்று இந்தியாவிலேயே 3வது மிகப்பெரிய கட்சியான எங்களை பார்த்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா என்ன செய்தார்கள் என கேட்டுள்ளார்.

 

இதனை வன்மையாக கண்டிக்கிறேன். ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத அவர் என்ன பேச்சு பேசுகிறார்? நாடாளுமன்றத்தில் நாங்கள் முழங்கியதால்தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. 

இது ஒன்று போதாதா? எங்களது சாதனைக்கு? அரசியல் டென்ஷனில் அவர் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தற்போது சேலம் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளேன். வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறேன். தலைமை உத்தரவிட்டதும் உடனடியாக பணியை தொடங்குவேன் என்று பன்னீர் செல்வம் தெரிவித்தார்.