வேலூர் மாவட்டம் தொண்டான் துளசி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் ரெட்டி. கான்ட்ராக்ட் தொழில் செய்து வந்த இவர், சென்னை தி.நகரில் குடியேறினார். படிப்படியாக முன்னேறி, தலைமை செயலர் ராம்மோகன் ராவ் மூலமாக அமைச்சர் விஜயபாஸ்கரின் நட்பு, பின்னர் முதல்மைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் நட்பு, அவரை தொடர்ந்து சின்னம்மா சசிகலா குடும்பத்தினர், உறவினர் என அசுர வளர்ச்சி பெற்றார்.

கோயம்புத்தூரை சேர்ந்த மணல் அறுமுகசாமி, மணல் குவாரி தொழிலில் கொடிக்கட்டி பறந்தவர் ஆவார். திமுக மற்றும் அதிமுக ஆட்சி காலத்திலும் ஆறுமுக சாமி கொடிக்கட்டி பறந்தார்.

அதிமுக தலைமையில் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாட்டால், மணல் ஆறுமுகசாமி கழற்றி விடப்பட்டார். அந்த இடத்துக்கு வந்தவர்தான் இந்த சேகர் ரெட்டி.

மிக குறுகிய காலமே, அதாவது ஒரு சில வருடம் மட்டுமே, இந்த கான்ட்ராக்ட் சேகர் ரெட்டிக்கு கொடுக்கப்பட்டாலும், மிகப்பெரிய நெட்வொர்க்கை வளர்த்து கொண்டார் சேகர் ரெட்டி. இதனால், அதிமுகவில் ‘அ முதல் ஃ வரை’ தன் வசமாக்கி கொண்டார்.

அதற்கான பரிசாக தமிழ்நாடு கோட்டாவில் இருந்து திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் என்ற மிகப்பெரிய கவுரவ பொறுப்பு அவருக்கு கிடைத்தது. பின்னர் கார்டனுக்குள் நடந்த உள்ளடி காரணமாக சேகர் ரெட்டி விரட்டப்பட்டார்.

தமிழ்நாடே வேண்டாம் என்று ஐதராபாத்தில் செட்டில்ஆன சேகர் ரெட்டி, முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெறும்போது, மீண்டும் ஃப்ரேமிற்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிகிறது. கடந்த ஒரு மாதமாகதான், சேகர் செட்டி தமிழக அரசியலில் ஆக்டிவ் ஆகியுள்ளார்.

வந்த வேகத்தில் தனது பழைய நட்புக்களை மீண்டும் புதுப்பிது கொண்டு, அவர்களுக்கு உதவி செய்கிறேன் என்ற பேர்வழி போர்வையில், பல முக்கிய அமைசர்களிடம் இருநது பழைய ரூபாய் நோடுகளை பெற்று கொண்டு, திருப்பதி கோயில் மூலமாக கிடைத்த புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்துள்ளார். இங்குதான் பிரச்சனையே ஆரம்பமாகியுள்ளது.

யாரோ சிலர், சிபிஐ அதிகாரிகளுக்கும், மத்திய அரசுக்கும், வருமான வரித்துறைக்கும் போட்டு கொடுத்ததன் அடிப்படையில், மோடி அரசின் கீழ் வசமாக சிக்கி கொண்டார் சேகர் ரெட்டி.

கையில் வைத்திருந்த ரூ.134 கோடி ரொக்க பணமும், 170 கிலோ தங்கமும், அரசிடம் மாட்டி கொண்டது. சிபிஐ வசம் வழக்கு போனதால், அவர்களிடம் சேகர் ரெட்டி, பல உண்மை தகவல்களை உளறி கொட்டியதாக தெரியவருகிறது.

மேலும் கிடைத்த பல சிடி மற்றும் டைரி ஆதராங்களை கொண்டும், தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ், அவரது மகன் வீடுகளில் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

அரசின் மிக மிக உயர் பதவியல் இருக்கும், முதலமைச்சருக்கு இணையான அதிகாரியான ராம்மோகன் ராவ் வீட்டிலேயே ரெய்டு நடத்திருப்பதால், சேகர் ரெட்டி தமிழக அரசையே அசைத்து பார்த்துள்ளார் என்றே சொல்லலாம்.

மேலும், முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தின் பி.ஏ. வீட்டிலும் ரெய்டு என தகவல் பரவியுள்ளது. இதனால், ஆளும் அதிமுக அரசுக்கு மிகப் பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் இதோடு முடிந்துவிடுமா…? அல்லது அரசை வழி நடத்தும் சிலர் மற்றும் அமைச்சர்கள் சிக்குவார்களா என்ற பரபரப்பு அமைச்சர்கள் மற்றும அதிகாரிகளிடம் ஏற்பட்டுள்ளது.

அதிமுகவால் விரட்டப்பட்டு, மீண்டும் ஒட்டிக் கொண்ட சேகர் ரெட்டியால், கட்சிக்கும், ஆட்சிக்கும் நிச்சயம் தலைவலிதான் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.