இலங்கையை சேர்ந்த விதவை பெண்ணை ஏமாற்றி இந்தியா அழைத்து வந்து அவரை சீரழித்து விட்டு சீமான் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக  சீமானின் உடனிருந்தவரும், அவரது நண்பருமான இமயம் பாண்டியன் பேசியுள்ள ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அந்த ஆடியோவில், ‘’சீமான் இலங்கை செல்கிறார். அங்கு சென்றவுடன் விமானம் மூலம் கொழும்பு போய் அங்கிருந்து படகு மூலம் முல்லைத்தீவு கொண்டு செல்கிறார்கள். அங்கிருந்து படகில் விசுவமடு செல்கிறார். அங்கு பிரபாகரனை பார்க்கிறார் சீமான். அதற்கு முன் இலங்கையில் செய்தி வாசிப்பாளரான யாழ்மதியை பார்த்துவிட்டார். அந்தப் பெண் அங்கு செய்தி வாசிப்பாளராக இருக்கிறார். இந்த பெண்ணைப் பார்த்த உடன் வந்த வேலையை விட்டுவிட்டு அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அவரை தன் வசப்படுத்த நினைக்கிறார் சீமான். அதனால் தான் ஒரு விதவைப்பெண்ணைத் தான் கட்டுவேன் என கயல்விழியை திருமணம் செய்வதற்கு முன்புகட்டுவேன் என பேர் திருமணத்துக்கு முன்பு வரை சொல்லி வந்தார். 

இந்த தகவல் பிரபாகரனுக்கு தெரியவர, ’சினிமாக்காரர்கள் எல்லாரும் இப்படித்தான் இருப்பார்களா? வந்த வேலையை மட்டும் பார்த்து விட்டு செல்லச் சொல்லுங்கள் என்று கோபப்பட்டு இருக்கிறார் பிரபாகரன். இருப்பினும் சீமானை பார்க்காமல் திருப்பி அனுப்ப கூடாது என்ற காரணத்தால் ஓரிரு நிமிடங்கள் சீமானை சந்தித்து பிரபாகரன் வழியனுப்பினார். இதுதான் வரலாறு. யாழ்மதியை எப்படியாவது கடத்திக்கொண்டு இந்திய வந்து விடுவேன் என்று சீமான் கடுமையாக முயற்சித்தார்.  

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் தடுப்பு முகாம் ஒன்றில் தங்கியிருந்த முன்னாள் பெண் புலி உறுப்பினரான யாழ்மதியை இந்தியாவுக்கு ஏமாற்றி அழைத்துக் கொண்டு போனார் சீமான். இந்த யாழ்மதி வேறு யாருமல்ல. அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த தமிழ் செல்வனின் பிரத்தியேகச் செயலாளர் அலெஸ்சின் மனைவி. 

தமிழ் செல்வன் மீதான குண்டுத்தாக்குதலில் கூடவே மரணமடைந்திருந்த அலெக்ஸின் மனைவி யாழ்மதியை இந்தியாவிற்கு அழைப்பித்துக் கொண்டதன் பின்னணியும் இருக்கிறது. தமிழ் செல்வனின் வெளிநாட்டு முதலீடுகளை அறிந்து வைத்திருந்த ஒரே நபர் அலெக்ஸ். அது அலக்ஸின் மனைவியான யாழ்மதிக்கும் தெரிந்திருக்கும். அவர் மூலமாக தமிழ்செல்வனின் சொத்துக்களை சூறையாடுவது தான் சீமானின் நோக்கம்.  அப்படி சொத்துக்கள் சூறையாடப்பட்ட பின்னர் சீமானால் கசக்கிப் பிளியப்பட்ட யாழ்மதி தூக்கி வீசப்பட்டார். அதன்பிறகே அரசியல்வாதியான காளிமுத்துவின் மகள் கயல்விழி யைக் கரம்பிடிக்க முடிவுசெய்தார் சீமான்.