Asianet News TamilAsianet News Tamil

சீமான் பேச்சை ரசித்த இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்... ஆச்சர்யத்தில் நாம் தமிழர்...!

திருவாரூரில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த நாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.செல்வராஜ், மேடையின் கீழே உள்ள இருக்கையில் அமர்ந்துக் கொண்டு அவரது பேச்சை ரசித்துக்கொண்டிருந்தார்.

seeman speech...cpi party candidate
Author
Tamil Nadu, First Published Apr 9, 2019, 5:49 PM IST

திருவாரூரில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த நாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.செல்வராஜ், மேடையின் கீழே உள்ள இருக்கையில் அமர்ந்துக் கொண்டு அவரது பேச்சை ரசித்துக்கொண்டிருந்தார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்து 20 பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. seeman speech...cpi party candidate

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளார்களுக்காக அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திருவாரூரில் நேற்று இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த நாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, வேட்பாளர் எம்.செல்வராஜ், மேடையின் கீழே உள்ள இருக்கையில் அமர்ந்து சீமானின் பேச்சை ரசித்து கேட்டுக் கொண்டிருந்தார். இதனையடுத்து செல்வராஜ் வந்ததை அறிந்த சீமான், அவரை மேடைக்கு அழைத்து வாழ்த்து தெரிவித்தார். seeman speech...cpi party candidate

இதுபற்றி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நாகப்பட்டினம் மக்களவை தொகுதி வேட்பாளர் செல்வராஜிடம் கேட்டபோது, நான் பிரசாரம் செய்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது, நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சீமான், மோடியின் பாகிஸ்தான் தாக்குதல்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார். சரி என்னதான் அவர் பேசுகிறார் என கேட்பதற்காகவே வாகனத்தை விட்டு இறங்கி, கூட்டத்தில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் துல்லியமாகப் பேசினார்” என்று புகழாரம் சூட்டினார். நான் வந்திருப்பதை அறிந்து சீமான் எனக்கு வாழ்த்து தெரிவிக்க மேடைக்கு அழைத்தார். இது ஒரு எதார்த்தமான நிகழ்வு என்று கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios