அண்மையில் இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி,தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் என முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் குடியுரிமை மசோதாவிற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சீமான்

நாம் தமிழர் கட்சியும் குடியுரிமை மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இலங்கை தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் குடியுரிமை மசோதாவில் சேர்க்காததை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சீமான் பேசும் போது மத்திய, மாநில அரசுகளை கடுமையாக தாக்கினார்.

Image may contain: one or more people, crowd, tree, sky and outdoor

மேற்கு வங்க முதல்வர் மம்தா போல மாநிலத்திற்கு ஒரு தலைவர் இருந்தால் நாடு எப்போதோ முன்னேறியிருக்கும் என்றார். இந்தியாவை மதமே ஆள்வதாகவும், பாகிஸ்தான் பிரிந்து சென்றதற்கு மதம் தான் காரணம் என கூறினார். வெங்காயதை வைத்து பலர் கோடீஸ்வரர் ஆகியிருந்தாலும் அதை விளைவிக்கும் விவசாயி ஏழ்மை நிலையிலேயே இருப்பதாக பேசினார். இந்த நிலைக்கு காரணமாவர்களை எல்லாம் மரத்தில் கட்டி வைத்து வெங்காயத்தை கண்ணில் தேய்க்க வேண்டும் என்று கோபமாக கூறினார்.

மேலும் குடியுரிமை மறுக்கப்பட்டால் தனக்கு ஒரு கவலையும் இல்லை என்ற சீமான், 'இருக்கவே இருக்கிறது கைலாச நாடு, அங்க எங்க அதிபர் நித்தியானந்தா இருக்காரு' என்று நகைச்சுவை பொங்க பேசினார்.