Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவின் ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடாதது ஏன்..? அவர்கள் என்ன புனிதர்களா..? சீமான் கேள்வி

சிபிஐ, தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, வருமானவரித்துறை நீதிமன்றம் இது அனைத்தும் தனித்த அதிகாரம் படைத்தது என நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இது அனைத்தும் பிரதமர் மோடியின் கைகளில் இருப்பதாக சீமான் தெரிவித்துள்ளார்.

Seeman questioned why Annamalai did not publish AIADMK's corruption list
Author
First Published Apr 17, 2023, 9:00 AM IST | Last Updated Apr 17, 2023, 9:00 AM IST

திமுக நிர்வாகிகள் ஊழல் பட்டியல்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியின் இல்ல விழாவில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், அண்ணாமலை அரசியல் முதிர்ச்சி இல்லாதவரின் கேள்விகளை தன்னிடம் கேட்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த சீமான்,  தலைவராh முதிர்ச்சியடைந்தவர், முதிர்ச்சி அற்றவர் என்று அப்படி ஒன்றும் இல்லை. ஒரு தேசிய கட்சி அவரை மாநில தலைவராக நியமித்திருக்கிறது. அதற்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். வயதில் சிறியவர், பெரியவர் என்று எல்லாம் பார்க்க கூடாது என கூறினார். முதல்வர் ஸ்டாலின் மீது மெட்ரோ ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ஊழல் செய்தால்  நடவடிக்கை எடுக்கக்கூடிய அதிகாரம் கொண்ட வருமான வரித்துறை, அமலாக்கத்துறை எல்லாம் பாஜக அரசிடம் தான் இருக்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. 

Seeman questioned why Annamalai did not publish AIADMK's corruption list

அதிமுக என்ன புனிதரா.?

இந்த மெட்ரோ திட்டம் திமுக ஆட்சியில் தொடங்கியது என்றாலும் அதிமுக ஆட்சியில் தான் அதிகளவு பணி நடைபெற்றது. எனவே அதிமுகவும்  ஊழல் செய்திருப்பார்கள். அதையும் எடுத்துக்காட்ட வேண்டும். திமுக ஊழல் பட்டியலை மட்டும் வெளியிட்டுள்ள அண்ணாமலை, அதிமுக ஆட்சிகால ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும். ஊழல் பட்டியலை வெளியிடாதது அதிமுகவில்  இருப்பவர்களை புனிதரா கட்டமைக்கின்ற மாதிரி தெரிகிறது. இந்த அணுகுமுறை சரியில்லையெனவும் கூறினார்.  சிபிஐ, தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, வருமானவரித்துறை நீதிமன்றம் இது அனைத்தும் தனித்த அதிகாரம் படைத்தது என நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இது அனைத்தும் பிரதமர் மோடியின் கைகளில் இருப்பதாக சீமான் குற்றம்சாட்டினார்.

இதையும் படியுங்கள்

கூட்டணி வேறு! கொள்கை வேறு! ஒருவருடைய இன்சியல் போல ஒருபோதும் கொள்கையை மாற்ற முடியாது- எடப்பாடி பழனிசாமி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios