கூட்டணி வேறு! கொள்கை வேறு! ஒருவருடைய இன்சியல் போல ஒருபோதும் கொள்கையை மாற்ற முடியாது- எடப்பாடி பழனிசாமி
அதிமுகவிற்கும், சிறுபான்மை மக்களுக்கும் இடையேயான உறவை யாராலும் மாற்ற முடியாது என எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, சிறுபான்மை மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தியாக குறிப்பிட்டார். நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழகம் முழுவதும் உள்ள 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார். நாகூர் தர்கா சந்தன கூடு திருவிழாவிற்கு தேவையான சந்தன கட்டைகள் ஆண்டு தோறும் இலவசமாக கொடுத்தது அதிமுக அரசு. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் உலமாக்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்பட்டதாகவும், தனது தலைமையிலான ஆட்சியில் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும் குறிப்பிட்டார்.
அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு ஸ்கார்பியோ கார் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த இபிஎஸ்..!
சிறுபான்மையினரின் அரண் அதிமுக
ஹஜ் பயணம் மேற்கொள்ள மத்திய அரசு வழங்கி வந்த மானியத்தை நிறுத்திய நிலையில், தமிழக அரசு 12 கோடி ரூபாய் மானியம் வழங்கியதாக கூறினார். சிறுபான்மை மக்களின் அரணாக அதிமுக என்றும் விளங்கி வருவதாகவும் குறிப்பிட்டார். நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள். எம்ஜிஆர்-ம், ஜெயலலிதாவும் சிறுபான்மை மக்களை எவ்வித சமரசங்களுக்கும் இடமின்றி பாதுகாத்து வந்துள்ளனர். அதே வழியில் எப்போதும் செயல்படுவோம். அதிமுகவிற்கும் சிறுபான்மை மக்களுக்கும் இடையே உள்ள உறவை யாராலும் சிதைக்க முடியாது என்று கூறினார். ஒரு சில கட்சிகளை போல கவர்ச்சியாக பேசி பொய்யான வாக்குறுதிகளை சொல்லி, சிறுபான்மையினர் மக்களின் வாக்குகளை ஏமாற்றும் கட்சி அல்ல அதிமுக.
கொள்கை மாறாது
கூட்டணி என்பது வேறு! கொள்கை என்பது வேறு! கொள்கை என்பது ஒருவருடைய இன்சியல் போல அதை ஒருபோதும் மாற்ற முடியாது. எங்கள் இன்சியல் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வகுத்தது. அந்த வழியில் சிறுபான்மையினருக்கு பாதுகாவலனாய் இருக்கும் . இந்த கொள்கை எப்போதும் மாறாது என தெரிவித்தார். கூட்டணி என்பது அவ்வபோது அரசியலில் ஏற்படும் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைக்கப்படுகிறது. கூட்டணி இடம்பெற்றிருக்கும் கட்சிகள் எல்லாம் அந்த கட்சியின் கொள்கை ஏற்பது இல்லை. அதிமுகவிற்கு என கொள்கை உள்ளது அந்த கொள்கையின் படி செயல்படுவோம் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்