இறுதி போர்கட்டத்திலே புலிகள் சாம்பார், கூட்டு, பொறியல் செஞ்சாங்க, கறி வறுத்து  கொடுத்து தான் சாப்பிடுவதை குறிப்பெடுத்துக் கொண்டதாக சீமான் பேசியது மீண்டும் சர்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தனக்கும், பிரபாகரனுக்கும் இடையேயான பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். 

அப்போது பிரபாகரன் தனக்கு போட்டு அம்மன் வீட்டில் விருந்து கொடுத்தார். பிரபாகரன், காட்டில் உள்ள ஒரு வீட்டிற்குள் அழைத்துச்சென்று விதவிதமான உணவுகளை விருந்தளித்து எனக்கு ருசிக்க தந்தார். தேர்தலில் நின்று ஜெயித்து தமிழக முதல்வராக வேண்டும் என்பதற்காக எல்லாம் நான் கட்சி தொடங்கவில்லை. இப்படி பேசுவதற்காகவே தான் கட்சி தொடங்கினேன் எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் சீமான் ஆமைக்கறி சாப்பிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது பொட்டு அம்மன் வீட்டில் பிரபாகரன் விருந்து கொடுத்தார் என்று பேசியது அரசியல் கட்சியினரிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. 

நெட்டிசன்களும் சீமானின் பேச்சை கிண்டலடித்து வருகின்றனர். ‘’இறுதி போர்கட்டத்திலே புலிகள் சாம்பார், கூட்டு, பொறியல் செஞ்சாங்க, கறி வறுத்து தந்தாங்க, ஆமை கறி திண்ணாங்க. நான் திங்கிறதை ஒருத்தங்க நோட்ஸ் எடுத்து அண்ணனுக்கு சொன்னாங்க...’’எனக் கூறி போராட்ட களத்தை கேலிகூத்தாக்கும் சீமான். புலிகளை கேவலபடுத்த இவன் ஒருத்தன் போதும்..’’என பலரும் பதிவிட்ட்டு வருகின்றனர்.