Asianet News TamilAsianet News Tamil

சிவகார்த்திகேயனுக்கு வலைவீசி இழுக்கும் சீமான்... வருத்தப்படாத வாலிபர் சிக்குவாரா அல்லது தப்புவாரா..?

சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்க இருக்கும் நான்கு தொகுதிகளை தவிர தமிழகத்தில் சென்னை துவங்கி வேறு எங்குமே பெரிய அரசியல் அதிர்வுகளே இல்லை! என்று நீங்கள் நினைத்தால் அது மிகப்பெரியமுட்டாள்தனம்.  சீமானின் புண்ணியத்தால் ச்சும்மா பற்றிக் கொண்டு எரிகிறது தமிழக அரசியல். 

seeman master plan
Author
Tamil Nadu, First Published May 3, 2019, 11:36 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்க இருக்கும் நான்கு தொகுதிகளை தவிர தமிழகத்தில் சென்னை துவங்கி வேறு எங்குமே பெரிய அரசியல் அதிர்வுகளே இல்லை! என்று நீங்கள் நினைத்தால் அது மிகப்பெரியமுட்டாள்தனம்.  சீமானின் புண்ணியத்தால் ச்சும்மா பற்றிக் கொண்டு எரிகிறது தமிழக அரசியல். 

தமிழில் இருக்கும் அத்தனை கெட்டவார்த்தைகளையும் பயன்படுத்தி, செந்தமிழன் சீமானின் முன்னாள் மற்றும் இந்நாள் பிள்ளைகள் இருவர் தாறுமாறாக மோதிக்கொண்ட அந்த அசிங்க ஆடியோ விவகாரத்தின் மூலம் தமிழக அரசியலில் ‘பயோ’ வெடிகுண்டே வெடித்திருக்கிறது! எனலாம்.  சீமானின் உதவியாளர் புகழேந்தியும், சீமானின் எதிரி தனசேகரும் பேசிக்கொள்ளும் ஆபாச ஆடியோ வெளியாகி ஓரு வாரத்துக்கும் மேலாகிவிட்ட நிலையில் இப்போதுதான் அதற்கு வாய் திறந்து பதில் பேச துவங்கியிருக்கிறார் சீமான். seeman master plan

ஆனாலும் கூட நேரடியாக அந்த விஷயத்தினுள் நுழையாமல், பரபரப்பை வேறு பக்கம் திருப்புவதற்காக பாவம் சிவனேன்னு நடிச்சுட்டு இருக்கிற சிவகார்த்திகேயனை உள்ளே இழுத்துப் போட்டிருக்கிறார் பாருங்க, அங்கே இருக்கிறார் அரசியல்வாதி சீமான். அப்படி என்ன சொல்லியிருக்கார் சீமான்...”தேர்தலை பல கட்டமாக நடத்தியது மூலமே தெரியுது மத்திய அரசின் தில்லுமுல்லு லட்சணம். ஏங்க நாடு முழுக்க ஒரே வரி விதிக்க முடியுற உங்களாலே ஒரே நாளில் தேர்தல் நடத்திட முடியாதா? கட்டங்கட்டமா பிரிக்கிறப்பவே தெரியுதே, ஏதோ தப்பு பண்ணப்போறாங்கன்னு. நல்லா ஓடுற தண்ணி நாலு நாள் தேங்கிக் கிடந்தா அது சாக்கடையாகி நாறிடும். எங்கே  தாமதம் நடக்குதோ, அங்கே தப்பு நடக்குதுன்னு அர்த்தம். seeman master plan

வெளிப்படையான  வாக்குச்சாவடி சீட்டில் மோசடி செஞ்ச மோடிக்கூட்டம், ரகசியமாய் காக்கப்படும் ஓட்டு எந்திரத்தில் செய்ய மாட்டாங்கள என்ன? கன்னியாகுமரியில் கிறுத்தவ மீனவ மக்களின் வாக்குகள் நாற்பதாயிரத்துக்கும் மேல் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளது. அந்த விஷயத்தை மேலே கொண்டு வருவதற்குள், தம்பி நாயகன் சிவகார்த்திகேயன் வாக்களித்ததை ‘தப்பு’ன்னு பரபரப்பாக்கி, அவர் மேலே நடவடிக்கை எடுப்போமுன்னு கிளப்பிவிடுறாங்க.

 seeman master plan

வாக்காளர் பட்டியலில் இருந்து சிவகார்த்திகேயன் பெயர் திடீர்னு காணாமல் போனது எப்படி? வருமான வரி பட்டியல்ல இருந்து அவருடைய பெயர் காணாமல் போயிருக்குதா!? அப்படியே காணாமல் போனாலும், அவர்கிட்ட வருமான வரி வாங்காமல் விட்டுடுவீங்களா? இப்ப சொல்றேன், தம்பி சிவகார்த்திகேயன் மேலே ஆணையம் வழக்கு போட்டால், நாங்க தேர்தல் ஆணையத்தின் மேலே வழக்கு போடுவோம். பல லட்சம் வாக்குகள் காணாமல் போனதற்கு பதில் சொல்ல தயாரில்லாத தேர்தல் ஆணையர், சிவகார்த்திகேயன் விஷயத்துக்கு மட்டும் பல தடவை பத்திரிக்கையாளர்களை சந்தித்து பரபரப்பாக பேசுகிறர். நாட்டில் பிரச்னைகளை திசை திருப்பிட, நடிகரை பலிகடாவாக்குகிறார்கள். பாவம் தம்பி. இப்படியொரு அத்துமீறல் நிகழ் அனுமதிக்க மாட்டோம். சிவகார்த்திக்கு  துணையிருப்போம்.” என்று கொதித்திருக்கிறார். seeman master plan

சீமானின் இந்த பேட்டியை வைத்துப் பேசும் அரசியல் விமர்சகர்கள், “சிவகார்த்தியனை குற்றம்சாட்டி, தேர்தல் ஆணையம் மற்ற பிரச்னைகளை திசை திருப்பியது போலவே சீமானும் செயல்படுகிறார். சிவகார்த்திக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து, அவருக்கு துணை இருப்பது போல் காட்டிக் கொண்டு தங்களின் ‘ஆபாச ஆடியோ’ விவகாரத்தை மக்கள் மனதிலிருந்து அப்புறப்படுத்திட முயற்சிக்கிறார். விட்டால், சிவகார்த்தியை தங்கள் கட்சிக்குள்ளேயே இழுத்துவிடுவார் போலிருக்குது. அப்படியொரு பிம்பத்தை உருவாக்கித்தான் சீன் செய்கிறார் சீமான்.” என்கிறார்கள். எதற்கு வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவர், விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம் இது!

Follow Us:
Download App:
  • android
  • ios