தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி., செந்தில்குமார், ‘சீமான் தமிழகத்திற்கு மிகவும் முக்கியமானவர். அவரின் தேவை தமிழகத்திற்கு அதிகமாக இருக்கிறது' என்று பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 
 
தனியார் தொலைக்காட்சி  நடத்திய விவாத நிகழ்ச்சியில்  பேசிய அவர், “சீமான் தமிழகத்திற்குத் தேவை. அவர் மிகவும் முக்கியமான நபர். காரணம், அவர்தான் தற்போது நமக்கு காமெடி கன்டென்ட் ஆக இருக்கிறார். வடிவேலுவும் இப்போது திரைப்படங்களில் நடிப்பதில்லை. அவரின் வெற்றிடத்தை சீமானால்தான் நிரப்ப முடியும். எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் மன அழுத்தமாக இருந்தால், சீமானின் வீடியோக்களைப் போட்டுத்தான் கேட்பேன்,” என்று கேலியாக பேசினார். 

சீமான், தமிழக அரசியல் களத்தில் பேசு பொருளாக இருந்து வருகிறார். காரணம், அவர் சமீபத்தில் விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்காக பேசிய சர்ச்சைக்குரிய பேச்சினால்தான். பிரசாரக் கூட்டத்தில் பேசிய சீமான், “காந்தியை, கோட்சே சுட்டார். அவர் சுட்டது சரிதான் என்று தொடர்ந்து பேசி வருகிறார்கள். பொது வெளியில் தொடர்ச்சியாக அது குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே மாதிரிதான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். அதுவும் சரிதான்” என்று பேசினார். இந்த பேச்சுக்காக சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.