Asianet News TamilAsianet News Tamil

சிறையில் இருந்து விடுதலையான ராஜீவ் கொலையாளிகள்.!60 நாட்களாக சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட கொடுமை-சீமான் ஆவேசம்

திருச்சி, சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள தம்பி ராபர்ட் பயசுக்கு அடிப்படை உரிமைகளை வழங்க மறுப்பதா? என கேள்வி எழுப்பியுள்ளா சீமான், விடுதலை பெற்றும் சிறைபோல வதைப்பதா? என கண்டனம் தெரிவித்துள்ளார்.

Seeman has demanded the release of Rajiv's killers, who are locked up in Trichy Special Camp
Author
First Published Jan 27, 2023, 8:16 AM IST

ராஜீவ் கொலையாளிகள்

ராஜீவ் காந்தி கொலையாளிகள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்துவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலான ராஜீவ் காந்தி கொகத்திற்ழக் பிறசி. உண்ண நீதிமன்றண்டு ளுஞ்கும் பேலாக தம்பி ராபர்ட் பயஸ், அண்ணன் ஜெயக்குமார், தம்பி முருகன், தம்பி சாந்தன் ஆகிய நால்வரும் திருச்சி, சிறப்பு முகாமில் அடிப்படை வசதிகள்கூட இல்லாது, அவதிப்பட்டு வரும் செய்தியானது பெரும் வேதனையளிக்கிறது. சிறைக்கொட்டடியிலிருந்து விடுதலைபெற்ற அவர்கள், அதனைவிடக் கொடுமையான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு, வதைக்கப்படுவது எதன்பொருட்டும் ஏற்புடையதல்ல.

தமிழ்நாடு வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காணுங்கள்! ஆளுநர் ரவி அதிரடி உத்தரவு

Seeman has demanded the release of Rajiv's killers, who are locked up in Trichy Special Camp

சிறப்பு முகாமில் அடைப்பு

தம்பி ராபர்ட் பயசும், அண்ணன் ஜெயக்குமாரும் புழல் நடுவண் சிறையிலிருந்து திருச்சியிலுள்ள சிறப்பு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு, 60 நாட்களுக்கு மேலாகியும் அங்கிருக்கும் அலுவலக அறையிலேயே அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதே அறையில் சமைத்துக்கொண்டு, அங்கேயே தங்க வேண்டியிருப்பதால் சுவாசக்கோளாறு ஏற்பட்டு, ஆஸ்துமா நோய்க்கும் ஆளாகியிருக்கிறார் தம்பி ராபர்ட் பயஸ். சிறைகளில்கூட நடைபயிற்சி மேற்கொள்ளவும், உடற்பயிற்சி செய்யவும் வாய்ப்பிருக்கும்போது முகாமில் அதற்கான அனுமதியோ, அங்கிருக்கும் பிறருடன் பழகுவதற்கான வாய்ப்போ வழங்கப்படாது, மறுக்கப்பட்டு வருகிறது.

Seeman has demanded the release of Rajiv's killers, who are locked up in Trichy Special Camp

சூரிய உதயத்தைக்கூடப் பார்க்கவில்லை

முகாமில், இரத்தச்சொந்தங்கள் மட்டுமே பார்க்க முடியுமெனும் விதியிருப்பதால், தம்பிகள் மீது பற்று கொண்ட தமிழ்ச்சொந்தங்களோ, இன உணர்வாளர்களோ சந்திப்பது முற்றிலும் தடைபட்டிருக்கிறது. அவர்கள் விடுதலைபெற்றுவிட்டதாக அவர்களது குடும்பத்தினரும், உறவுகளும், உலகெங்கும் வாழும் தமிழ்ச்சொந்தங்களும் நம்பிக்கொண்டிருக்கையில், இன்றுவரை அவர்கள் சுவாசக்கற்றையே சுவாசிக்கவில்லை; சூரிய உதயத்தைக்கூடப் பார்க்கவில்லை என்பது சொல்லொணாத் துயரமாகும். சிறைக்குள்கூட தொலைபேசியின் வாயிலாகவோ, அலைபேசியின் வாயிலாகவோ வாரம் ஒருமுறை பேசுவதற்கு வாய்ப்பு வழங்குவார்கள். சிறப்பு முகாமுக்குள் அதற்கான வாய்ப்புமில்லை.

Seeman has demanded the release of Rajiv's killers, who are locked up in Trichy Special Camp

முற்றுகை போராட்டம் -சீமான்

32 ஆண்டுகளில் மொத்த இளமைக்காலத்தையும் சிறைக்கொட்டடிக்குள் தொலைத்துவிட்டு, உடலியல் சிக்கல்களோடும், மனஉளைச்சலோடும் வெளி வந்திருக்கும் அவர்கள் எஞ்சியிருக்கும் வாழ்க்கையையாவது வாழ வழிவிடுவதே மாந்தநேயமாகும். ஆகவே, இவ்விவகாரத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சிறப்புக் கவனமெடுத்து, சிறப்பு முகாமிலிருந்து அவர்களை மாற்றிடத்தில் தங்க வைப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனவும்,  இத்தோடு, அவர்கள் விரும்பும்பட்சத்தில் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகளை செய்துதர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், சிறப்பு முகாமை முற்றுகைட்டுப் போராட்டம் நடத்துவோமென சீமான் எச்சரித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

பட்டியலின ஊராட்சி தலைவர் கொடியேற்றுவதை தடுத்த திமுக நிர்வாகி.! மு.க.ஸ்டாலின் மௌனம், அவலத்தின் உச்சம்- அண்ணாமலை

Follow Us:
Download App:
  • android
  • ios